உலகம்

21 வயதில் Miss Universe பட்டம் வென்ற இந்தியப் பெண்.. யார் இந்த ஹர்னாஸ் கவுர் சாந்து!

பஞ்சாபைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் Miss Universe பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

21 வயதில் Miss Universe பட்டம் வென்ற இந்தியப் பெண்.. யார் இந்த ஹர்னாஸ் கவுர் சாந்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இஸ்ரேல் நாட்டில் உள்ள எய்லட் நகரில் இந்த ஆண்டுக்கான Miss Universe போட்டி நடைபெற்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 80 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில், அழகு, அறிவு, உடல்வாகு, சமூகப் பார்வை என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் Miss Universe அழகிக்கான தேர்வு நடைபெற்றது.

இதில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்னாஸ் சாந்து இந்த ஆண்டுக்கான Miss Universe பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம் 21 ஆண்டுகள் கழித்து இந்த பட்டத்தை இந்தியா வென்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2000ம் ஆண்டு லாரா தத்தா இந்தப் பட்டத்தை வென்றுள்ளார்.

பஞ்சாப் மாநிலம், சண்டிகரைச் சேர்ந்தவர் ஹர்னாஸ் கவுர் சந்து. இவர் 2017ம் ஆண்டு Miss Chandigarh பட்டத்தை வென்றுள்ளார். 2012ம் ஆண்டு Miss Diva பட்டம் உட்பட பல்வேறு அழகி பட்டங்களை வென்றுள்ளார்.

மேலும் Yaara Diyan Poo Baran” மற்றும் “Bai Ji Kuttange” ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories