உலகம்

குழந்தைகளைக் குறிவைக்கும் ஒமைக்ரான்... தென்னாப்பிரிக்காவில் அதிகமானோர் பாதிப்பு - அதிர்ச்சி தகவல்!

தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று குழந்தைகளிடம் அதிகளவு பரவியுள்ளது.

குழந்தைகளைக் குறிவைக்கும் ஒமைக்ரான்... தென்னாப்பிரிக்காவில் அதிகமானோர் பாதிப்பு - அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உருமாறிக் கொண்டே வருவது மக்களை அச்சமடைய வைத்துள்ளது. ஏற்கனவே டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாறிய கொரோனா தொற்று தற்போது ஒமைக்ரான் தொற்றாக உருமாற்றம் அடைந்துள்ளது.

இந்த ஒமைக்ரான் தொற்று டெல்டா பிளஸ் தொற்றை விட மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுவரை ஒமைக்ரான் 38 நாடுகளில் பரவியுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 11 மாகாணங்களில் ஒமைக்ரான் வைரஸ் ஊடுருவியுள்ளது. அதேபோல், வயதானவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்படும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதல் முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் வைரஸ் குழந்தைகளையே அதிகம் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் 5 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என விஞ்ஞானிகள் கூறிவந்தனர். ஆனால் பெரிதாக கொரோனா குழந்தைகளைத் தாக்கவில்லை. இந்நிலையில் ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் அதிகளவில் குழந்தைகளைத் தாக்கியுள்ளது விஞ்ஞானிகளையும், மக்களையும் அச்சமடைய வைத்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாமா என்பது குறித்து ஒன்றிய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.

banner

Related Stories

Related Stories