உலகம்

OMICRON வைரஸ் பேரழிவை ஏற்படுத்துமா: இங்கிலாந்து விஞ்ஞானி கூறியது என்ன?

ஒமிக்ரான் வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என இங்கிலாந்து விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

OMICRON வைரஸ் பேரழிவை ஏற்படுத்துமா: இங்கிலாந்து விஞ்ஞானி கூறியது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி, தற்போதுதான் படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது.இந்நிலையில் மீண்டும் புதிதாக உருமாறிய ஒமிக்ரான் என்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளைப் பீதியடைய வைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் உருமாறிய பி.1.1.529 என்ற கொரோனா தொற்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மேலும் இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒமிக்ரான் வைரஸ் 32 வகையில் உருமாறும் தண்மை கொண்டது என்பதையும், இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் அவர்களையும் தாக்கும் வீரியம் கொண்டவை எனவும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதையடுத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்குக் கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் தடைவிதித்துள்ளன. மேலும் உலக நாடுகள் முழுவதும் விமான நிலையங்களில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிய உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தாது என இங்கிலாந்து விஞ்ஞானி காலம் செப்பிள் தெரிவித்துள்ளார்.

OMICRON வைரஸ் பேரழிவை ஏற்படுத்துமா: இங்கிலாந்து விஞ்ஞானி கூறியது என்ன?

இது குறித்து விஞ்ஞானி காலம் செம்பிள் கூறுகையில்," இந்த புதியவகை கொரோனா ஒமிக்ரான் வைரஸ் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது. ஆனால் விஞ்ஞானிகள் பலரும் இந்த வைரஸ் கொடியது என கூறி வருகிறார்கள். இதை இவர்கள் மிகைப்படுத்திக் கூறிவருவதாகவே தோன்றுகிறது.

மேலும் தடுப்பூசியால் கிடைக்கிற நோய் எதிர்ப்பு சக்தி, இன்னும் கடுமையான நோயிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கும். தடுப்பூசி அதிகம் பேர் செலுத்திக்கொண்டுள்ளதால் இறப்பவர்கள் வாய்ப்பு வெகுவாக குறைந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories