உலகம்

“காப்பி அடிக்கிறாங்க.. இது அவரோட கெத்தை குறைக்குது” : லெதர் கோட் அணிய தடை போட்ட வடகொரியா!

வடகொரியாவில் லெதர் கோட் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“காப்பி அடிக்கிறாங்க.. இது அவரோட கெத்தை குறைக்குது” : லெதர் கோட் அணிய தடை போட்ட வடகொரியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல் நலம் குறித்து அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சைக் கருத்து வந்து கொண்டேதான் இருக்கிறது. அப்போது எல்லாம் அந்த சர்ச்சைக்கு வடகொரிய அரசு முற்றுப்புள்ளி வைக்கும்.

அண்மையில் கூட ‘SQUID GAME’ வெப் சீரிஸை காப்பி செய்து கொடுத்தவருக்கு மரண தண்டனையும், பார்த்தவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதிபர் கிம் ஜாங் உன்னின் உடையணியும் விதத்தைக் காப்பியடிப்பதைத் தடுக்கும் விதமாக அந்நாட்டு மக்களுக்கு லெதர் கோட் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2919ஆம் ஆண்டிலிருந்து அதிபர் கிங் ஜாங் உன் லெதர் கோட் அணிந்து வருகிறார். இதையடுத்து அந்நாட்டின் பணக்காரர்கள் சிலர் அவரது லெதர் கோட்டை போலவே உடையணியத் தொடங்கியுள்ளனர்.

மேலும் கிங் ஜாங் உன் அணியும் லேதர் கோட்டை போலவே போலியாக கடைகளில் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இது அதிபரின் மதிப்பைக் குறைக்கும் விதத்தில் இருந்துள்ளது.

இதையடுத்து அந்நாட்டில் லெதர் கோட் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் போலி லெதர் கோட்டுகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories