உலகம்

ஒரு நிமிடம் தாமதமாக வந்த ரயில் ஓட்டுநருக்கு அபராதம்.. நஷ்டஈடு கேட்ட ஓட்டுநர்.. நடந்தது என்ன?

ஜப்பானில் ஒரு நிமிடம் ரயிலைத் தாமதமாக ஓட்டி வந்ததால் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு நிமிடம் தாமதமாக வந்த ரயில் ஓட்டுநருக்கு அபராதம்.. நஷ்டஈடு கேட்ட ஓட்டுநர்.. நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு ஜப்பானில் ஓகயான் என்ற ரயில்வே நிறுவனத்தில் பணியாற்றும் ஓட்டுநர் ஒருவர் ரயிலை தாமதமாக ஓட்டி வந்ததால் அவரது ஊதியத்தில் 85 யென் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர் நிறுவனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றுள்ளது.

ஓகாயா ரயில் நிலையத்தில் காளியாக இருந்து நடைமேடையில் ஓட்டுநர் ரயிலுக்காக காத்திருந்துள்ளார். அப்போது தவறான நடைமேடையில் இருப்பதை உணர்ந்த அவர் சரியான நடைமேடைக்குச் செல்வதற்கு தாமதமானது.

இதனால் ஓகயாமா நிலையத்திலிருந்து டிப்போவில் ரயிலை நிறுத்துவதற்கு ஒரு நிமிடம் தாமதமானது. இதனால் அவரது ஊதியத்தில் இருந்து 85 யென் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் ஓட்டுநரின் பிரச்சனையில் தொழிலாளர் நல அலுவலகமும் தலையிட்டு இருந்தது.

இதையடுத்து நீதிமன்றம் 85 யென்னில் இருந்து 56 யென்னாக அவரது அபராதத் தொகையை குறைந்தது. இது இந்திய மதிப்பில் 36 ரூபாயாகும். இருந்தபோதும் அபராதத்தொகையை செலுத்த முடியாது என ரயில் ஒட்டுநர் தெரிவித்துள்ளார். மேலும் நஷ்ட ஈடாக ரூ.14 லட்சம் கேட்டு நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories