இந்தியா

திடீரென துணிக்கடைக்குள் புகுந்த பைக்.. அலறிய வாடிக்கையாளர்கள்.. வெளியான CCTV காட்சி : நடந்தது என்ன?

தெலங்கானாவில் இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக துணிக்கடைக்குள் புகுந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது.

திடீரென துணிக்கடைக்குள் புகுந்த பைக்.. அலறிய வாடிக்கையாளர்கள்.. வெளியான CCTV காட்சி : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள ராவிசெட்டு பஜாரில் உள்ள துணிக்கடைக்குள் இருசக்கர வாகனம் ஒன்று புகுந்த சி.சி.டி.வி காட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், துணிக்கடையின் உள்ளே இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென இருசக்கர வாகனம் ஒன்று கடைக்குள் வேகமாகப் புகுந்தது.

இதையடுத்து இருசக்கரவாகன ஓட்டுநர் தலைக்குப்புற கவிழ்ந்து விழும் காட்சியும் பதிவாகியுள்ளது. இது பற்றி அறிந்த போலிஸார் உடனே அங்கு சென்று இருசக்கர வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் இரு சக்கர வாகனத்தில் பிரேக் ஒயர் பழுதானதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த திங்களன்று இரவு நடந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவை பலரும் தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories