உலகம்

“மாணவர்கள்-பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் ரகசிய கேமராக்கள்”: தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

பாகிஸ்தானில் உள்ள தனியார் பள்ளி கழிவறையில் ஏராளமான ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“மாணவர்கள்-பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் ரகசிய கேமராக்கள்”: தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள தி ஹேரகஸ் என்ற தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கடந்த 3ம் தேதி கராச்சி கல்வித்துறை உயர் அதிகாரிகளை அனுகி புகார் ஒன்றைக் அளித்தார்.

அந்த புகாரில், தான் பணியாற்றும் பள்ளியில் அதிலும் குறிப்பாக பெண்கள் மற்றும் மாணவிகள் பயன்படுத்தும் கழிவரையில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டதாகவும், இதுதொடர்பாக கேட்டபோது பள்ளி நிர்வாகம் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும், எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியிருந்தார்.

அவரின் புகாரைத் தொடர்ந்து பள்ளிக்கு விரைந்த கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி கழிவறையில் சோதனை செய்த போது, கழிவறைகளின் சுவற்றில், ஷீட்களுக்கு பின்னும், வாஷ்பேசின் அருகேயும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

“மாணவர்கள்-பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் ரகசிய கேமராக்கள்”: தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அதேபோல், ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் பயன்படுத்தும் கழிவறை ஒன்றிலும் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்ததையும் அவற்றின் மூலம் வீடியோக்கள் எடுக்கப்பட்டதையும் அவர்கள் உறுதி செய்தனர். இதனையடுத்து இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கவேண்டும் என அறிவுறுத்தினர்.

ஆனால் பள்ளி நிர்வாகத்தில் இருந்து யாரும் விளக்கம் அளிக்க வராததால், விசாரணை முடியும் வரை பள்ளியின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories