உலகம்

தண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன?

ஆஸ்திரேலியாவில் வழிதவறி காணாமல் போன இரண்டு இளைஞர்களை போலிஸார் ஒரு வாரம் கழித்து மீட்டனர்.

தண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய ஆஸ்திரேலியாவின் ஹார்ட்ஸ் ரேஞ்ச் பகுதியில் ஷான் எமிட்ஜா மற்றும் மகேஷ் பேட்ரிக் ஆகிய இரண்டு இளைஞர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர்.

இந்தப் பகுதி மனித நடமாட்டமே இல்லாத பகுதியாகும். இந்நிலையில் இரண்டு இளைஞர்களும் சென்ற கார் திடீரென பழுதாகி நின்றுள்ளது. இதனால் அவர்கள் அங்கிருந்து நெடுஞ்சாலையை நோக்கி நடந்து சென்றுள்ளனர்.

இப்படிச் செல்லும்போது வழிதவறி இருவரும் வேறு வேறு பாதையில் சென்றுள்ளனர். மேலும் இவர்கள் சென்ற பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லாததால் குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இரண்டு இளைஞர்களும் காணாமல் போனதை அடுத்து அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இவர்கள் காணாமல் போன இடம் 40 டிகிரி வெப்பம் இருக்கும் என்பதாலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கிடைக்கவே அங்கு சிரமம் என்பதாலும் உடனே போலிஸார் ஹெலிகாப்டர் உதவியுடன் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தினர்.

தண்ணி இல்லாத காட்டில் மாட்டிக்கொண்ட 2 பேர்.. 1 வாரம் கழித்து மீட்ட போலிஸ்: ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன?

பின்னர் ஒரு வாரம் கழித்து மகேஷ் பேட்ரிக்கை முதலில் கண்டுபிடித்தனர். அதிக தூரம் நடந்ததால் அவரது காலில் புண் ஏற்பட்டிருந்தது. பிறகு அடுத்தநாள் ஷான் எமிட்ஜாவை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இருவருக்கும் போலிஸார் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இவர்கள் இருவரும் ஒருவாரமாகத் தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் உயிர் பிழைத்திருப்பது பெரிய விஷயம் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories