உலகம்

சிலிண்டர் ரூ.2675 - பால் 1 லிட்டர் ரூ.250... ஜெட் வேகத்தில் உயரும் விலை : விழிபிதுங்கி நிற்கும் இலங்கை!

இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.2,657 ஆக அதிகரித்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சிலிண்டர் ரூ.2675 - பால் 1 லிட்டர் ரூ.250... ஜெட் வேகத்தில் உயரும் விலை : விழிபிதுங்கி நிற்கும் இலங்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குப் பெரிய வருவாய் என்றால் அது சுற்றுலாத்துறைதான். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று நீடித்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது.

இதனால், அந்நிய செலாவணி இருப்பு வெகுவாகக் குறைந்ததால் ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்துவிட்டது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செல்வதில் அந்நாட்டிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மின்னல் வேகத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று ரூ.1400க்கு விற்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நான்கே நாட்களில் அதிரடியாக உயர்ந்து ரூ.2657க்கு விற்கப்படுகிறது.

சிலிண்டர் ரூ.2675 - பால் 1 லிட்டர் ரூ.250... ஜெட் வேகத்தில் உயரும் விலை : விழிபிதுங்கி நிற்கும் இலங்கை!

அதேபோல், ஒரு லிட்டர் பால் ரூ.250க்கு விற்கப்படுகிறது. இதுவே சில்லறை விலையில் ரூ.1195க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கோதுமை மாவு, சர்க்கரை மற்றும் சிமென்ட் போன்ற பிற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது.

இருப்பினும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமூக ஊடகங்களில் அதிபர் கோத்தபய ராஜபக்வுக்குஷ எதிராக தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். இலங்கையில் இதே நிலை தொடர்ந்தால் விரைவிலேயே அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories