உலகம்

“6 நாளில் 2வது முறையாக நடந்த தவறு.. பயனாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட Facebook” : காரணம் என்ன?

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஃபேஸ்புக்கு முடங்கியது பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“6 நாளில் 2வது முறையாக நடந்த தவறு.. பயனாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட Facebook” : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களும் கடந்த திங்களன்று உலகம் முழுவதும் முடங்கியது. இதனால் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேலாக இந்த தளங்கள் முடங்கியது இதன் பயனாளர்களை பெரும் அதிர்ச்சியடை செய்தது.

இதை அடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் இந்த பிரச்சனையைச் சரி செய்தது. ஃபோஸ்புக் நிறுவனத்தின் தளங்கள் 6 மணி நேரத்திற்கு முடங்கியதால் இதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ரூ. 52 ஆயிரம் கோடியாகக் குறைந்தது.

மேலும் முடங்கிய அந்த ஆறு மணி நேரத்தில் மட்டும் டெலிகிராமில் 7 கோடி போர் புதிதாகச் சேர்ந்துள்ளதாக அந்த நிறுவனர் பாவேல் துரோவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் நேற்று இரவு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இரண்டு மணி நேரம் முடக்கியது.

ஒரேவாரத்தில் மட்டும் இரண்டு முறை முடக்கியதால் இதன் பயனாளர்கள் அதிருப்தியடைந்து ஃபேஸ்புக்கு நிறுவனத்தைக் கிண்டல் செய்து மீம்ஸ் செய்தனர். மேலும் ஃபேஸ்புக் நிறுவனத்தில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இந்த தடங்கள் குறித்து பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், “கடந்த இரண்டு மணி நேரத்தில் எங்கள் தயாரிப்புகளை அணுக முடியாத எவருக்கும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறோம். நாங்கள் சிக்கலைச் சரிசெய்துவிட்டோம். இப்போது எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது" என தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories