உலகம்

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்திய ‘Game of Thrones’ நடிகர்... இவர் யார் தெரியுமா?

பாராலிம்பிக் போட்டியில் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' நடிகர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று அசத்திய ‘Game of Thrones’ நடிகர்... இவர் யார் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2011ஆம் ஆண்டு HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கிய கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரியலுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த தொடரின் கடைசி பாகம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது.

இந்நிலையில் இந்த தொடரில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஒருவர் பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். கிறிஸ்டீன் கூம்ப்ஸ் என்ற நடிகர்தான் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

பாராபேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணாவுடன் கடுமையாகப் போராடி தோல்வியடைந்தார் கிறிஸ்டீன் கூம்ப்ஸ். இதில் தோல்வியடைந்தாலும் அவருக்கு வெண்கலப் பதக்கத்திற்கு விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கிறிஸ்டீன், 44 நிமிடங்கள் நடந்த போட்டியில் தன் முழுத்திறனையும் வெளிப்படுத்தி பதக்கத்தை வென்றார். கிறிஸ்டீன் நடிகர், விளையாட்டு வீரர் எனப் பன்முகம் கொண்டவர்.

இவர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சிரீயலில் நான்காவது பாகத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார். கிறிஸ்டீனை இந்த தொடரில் யாரும் கவனிக்காமல் கூட இருந்திருக்கலாம். ஆனால் பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று தனது திறமையை மீண்டும் இந்த உலகத்திற்குக் காட்டியுள்ளார்.

கிரேட் பிரிட்டனை சேர்ந்த கிறிஸ்டீன் கூம்ப்ஸ்க்கு 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories