உலகம்

ராணுவ ஆட்சி தொடர்ந்தால் பொருளாதாரத் தடை : மியான்மருக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

ராணுவ ஆட்சி தொடர்ந்தால் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

ராணுவ ஆட்சி தொடர்ந்தால் பொருளாதாரத் தடை : மியான்மருக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தேர்தலில் மோசடி செய்ததாக தேசிய ஜனநாயக லீக் கட்சியினரைக் கைது செய்ததாக மியான்மர் ராணுவம் கூறுகிறது. இப்போது ஆட்சியதிகாரம் ராணுவத் தளபதி மின் ஆங் லெய்ங்கிடம் உள்ளது. இவர் வந்தவுடன் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்துள்ளார்.

யாங்கூனில் ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் நிற்கின்றனர். தேசிய ஜனநாயக லீக் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் மொபைல் தகவல் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முடிந்து ஜனநாயக அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே ராணுவத்துக்கும் அரசுக்கும் மோதல் இருந்து வந்தது. எப்போது வேண்டுமானாலும் ராணுவப் புரட்சி வெடிக்கலாம் என்ற நிலை இருந்தது.

ராணுவ ஆட்சி தொடர்ந்தால் பொருளாதாரத் தடை : மியான்மருக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

இந்நிலையில் ராணுவ அடக்குமுறைகள் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது மீண்டும் தலைவிரித்தாடும் என்று அவர்கள் மத்தியில் அச்சமேற்பட்டுள்ளது. வங்க தேசத்தில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள் இன்னும் அகதிகள் வருகை அதிகரிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனநாயக மரபுகள் காக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் முடிவுகளை முறியடிக்கும் சக்திகளை கடுமையாக எச்சரிக்கிறோம் என்றார்.

“சமீபத்திய தேர்தல் முடிவுகளை மாற்றும் எந்த ஒரு சக்தியையும் அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது. மியான்மரின் ஜனநாயக மாற்றத்துக்கு தடை ஏற்படுத்த அனுமதியோம். இப்போது ராணுவப்புரட்சியை வாபஸ் பெற்று தலைவர்களை விடுதலை செய்யவில்லை எனில் கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டி வரும்” என்று பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories