உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலை : படுதோல்வியை சந்திக்க போகும் டொனால்டு டிரம்ப் ?

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். மேலும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பின்னடைவு சந்தித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலை : படுதோல்வியை சந்திக்க போகும் டொனால்டு டிரம்ப் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, வழக்கப்படி நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய் கிழமையான 3ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அமெரிக்காவின் 46வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்று காலை 5 மணிக்கு தொடங்கியது. சுமார் 10 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்த நிலையில், தேர்தல் நாளான நேற்று முதல் மேலும் 6 கோடி பேர் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இந்த வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் ஒவ்வொரு மாகாணத்திலும் மாறுபட்ட நிலையில், வெற்றியை தீர்மானிக்கக் கூடிய முக்கிய மாகாணங்களான 50 மாகாணங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலை : படுதோல்வியை சந்திக்க போகும் டொனால்டு டிரம்ப் ?

இந்த தேர்தலில், ஆளும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையும், ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் துணை அதிபரான ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவுகள் முடிந்த மாகாணங்களில் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டது. தற்போது வரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 209 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார்.

குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 118 இடங்கள் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார். அமெரிக்காவின் மசாசூட்ஸ், நியூ ஜெர்சி, மேரிலாண்ட் மற்றும் வெர்மாண்ட் ஆகிய மாகாணங்களில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலை : படுதோல்வியை சந்திக்க போகும் டொனால்டு டிரம்ப் ?

தொடர்ந்து வாக்குப்பதிவு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்பதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. உலக அரசியலை தீர்மாணிக்கும் தேர்தல் என்பதால், அனைத்து மாகாணங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories