உலகம்

வேலையிழந்து பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட இந்தியர்கள் - மீட்க நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?

வேலையிழந்த நிலையில் சொந்த ஊர் திரும்ப இயலாமல் அவதிப்பட்ட 450 இந்தியர்கள் சவுதியில் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வேலையிழந்து பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட இந்தியர்கள் - மீட்க நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?
user
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலையிழந்த நிலையில் வேலைக்கான அனுமதிக் காலம் முடிவடைந்துவிட்டதால் சொந்த ஊர் திரும்ப இயலாமல் அவதிப்பட்ட 450 இந்தியர்கள் சவுதியில் பிச்சையெடுத்தனர். இதனையடுத்து அவர்கள் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் அரபு நாடுகளில் பணி செய்து வருகின்றனர். கொரோனா தொற்று தற்போது அங்கு பணியாற்றி வந்த பலரையும் நிர்க்கதிக்கு உள்ளாக்கியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக வேலையிழந்த பலருடைய பணி அனுமதிக் காலம் முடிவடைந்த நிலையில், அவர்கள் நாடு திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து அவர்களை கைது செய்த அதிகாரிகள், அவர்களை தடுப்பு முகாம்களில் அடைத்துள்ளனர்.

இந்தியர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. வேலையிழந்து பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்திய அரசு தலையிட்டு தங்களை மீட்கவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories