உலகம்

அமேசானில் ஒரு மாதத்தில் 6,803 காட்டுத் ‘தீ’ பாதிப்பு - பொய் என பிரச்சனையை மூடி மறைக்கும் பிரேசில் அதிபர்!

அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஜூலை மாதம் மட்டும் சுமார் 6,803 காட்டு தீ விபத்து உருவாகியுள்ளதாக பிரேசில் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசானில் ஒரு மாதத்தில் 6,803 காட்டுத் ‘தீ’ பாதிப்பு - பொய் என பிரச்சனையை மூடி மறைக்கும் பிரேசில் அதிபர்!
UESLEI MARCELINO / REUTERS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகளவில் மிகப்பெரிய காட்டுப் பகுதியான அமேசான் காடுகளில் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், அரிய வகை விலங்குகள், பறவைகள் என பலவகை உயிரினங்கள் உள்ளன. அமேசான் காடுகளின் பெரும்பகுதி பிரேசிலிலும், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளிலும் அமைந்துள்ளது.

அமேசான் மழைக் காடுகள்தான் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கினை வகிக்கிறது. ஆனால், இந்த காடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மட்டும் அதிகமுறை காட்டு தீ உருவாகியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது இயற்கை நமக்குக் கொடுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்றும் ஈக்குவடார் நாட்டின் பழங்குடியினர் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் கடந்த ஜூன் மாதம் இருந்த தீ பாதிப்பை விட ஜூலை மாதம் மட்டும் 28 சதவீத பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமேசானில் ஒரு மாதத்தில் 6,803 காட்டுத் ‘தீ’ பாதிப்பு - பொய் என பிரச்சனையை மூடி மறைக்கும் பிரேசில் அதிபர்!
UESLEI MARCELINO

இதுகுறித்து பிரேசில் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமேசான் மழைக்காடுகளில் கடந்த ஜூலை மாதம் மட்டும் சுமார் 6,803 காட்டு தீ விபத்து உருவாகியுள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டு உருவான தீ விபத்தைக் காட்டிலும் அதிகம் என கூறிப்பிட்டுள்ளது.

அதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்ட தீ விபத்து எண்ணிக்கை 5,318 ஆகும். ஆனால் தற்போது அதைவிட அதிக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீயினால் உயிரினங்கள் பல அழிந்துள்ளதாகவும், உயிர்க்கோளத்தின் மறுசுழற்றியே சிதைந்து போகும் அபாயத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் காட்டு தீயை அணைக்கவும், அதுகுறித்து விசாரணை நடத்தவும் இதுவரை பிரேசில் அதிபர் எந்த ஒரு உத்தரவை பிறப்பிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அமேசான் மழைக் காடுப் பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் சூழலியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அமேசானில் ஒரு மாதத்தில் 6,803 காட்டுத் ‘தீ’ பாதிப்பு - பொய் என பிரச்சனையை மூடி மறைக்கும் பிரேசில் அதிபர்!
FLORIAN PLAUCHEUR

மேலும் பல நாடுகள் உதவிக்கு முன்வந்துள்ளனர். ஆனால் நாங்களே பார்த்துக்கொள்கிறோம், உலக நாடுகள் தலையீடவேண்டாம் என பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோ சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ, பொருளாதாரத்தில் உயர்த்துவதற்காக பிரேசில் மழைக்காடுகள் அழிக்கப்படுவதனைக் கண்டுக்கொள்ளாமல் ஆட்சி செய்து வருகிறார் என்று பூர்வ பழங்குடிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெய்ர் போல்சோனரோ, “வெப்பமணடல மழைக்காடுகளில் தீ பிடிக்காது; எனவே அமேசான் காடு எரிவதாக செல்வது பொய்” எனத் தெரிவித்துள்ளார். போல்சோனரோ இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories