உலகம்

“உலக பொருளாதாரம் மீண்டெழ 10 ஆண்டுகள் எடுக்கும் : ஆனால் ஆசிய நாடுகள்...” - டாக்டர் டூம் அதிர்ச்சி தகவல்!

அமெரிக்கா, சீனாவின் பலத்தை முடிவெடுக்கும் நிலையில் ஆசிய நாடுகள் இருக்கும் என டாக்டர் டூம் கூறியுள்ளார்.

“உலக பொருளாதாரம் மீண்டெழ 10 ஆண்டுகள் எடுக்கும் : ஆனால் ஆசிய நாடுகள்...” - டாக்டர் டூம் அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனாவின் தாக்கம் தற்போது உலகின் 180க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டும், 3.40 லட்சம் பேர் பலியாகியும் உள்ளனர்.

21 லட்சம் பேர் குணமாகியிருந்தாலும், கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக முடிவடையாத காரணத்தால் சொற்ப நாடுகளைத் தவிர பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு நீடித்தே வருகிறது. ஒருபுறம் உடல் ரீதியில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டே மறுபுறத்தை உலக பொருளாதாரத்தை மொத்தமாக முடக்கியுள்ளது.

“உலக பொருளாதாரம் மீண்டெழ 10 ஆண்டுகள் எடுக்கும் : ஆனால் ஆசிய நாடுகள்...” - டாக்டர் டூம் அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கு ஓராண்டு, ஈராண்டுகள் எடுக்கும் என பலரும் கூறிவந்த நிலையில், அமெரிக்காவின் முன்னாள் பொருளாதார ஆலோசகரான ‘டாக்டர் டூம்’ என அழைக்கப்படும் பொருளாதார வல்லுநர் நோரியல் ரூபினி கொரோனாவில் இருந்து மீண்டு வர 10 ஆண்டுகள் எடுக்கும் என கூறியுள்ளார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற நோரியல் ரூபினி, அமெரிக்கா, இஸ்ரேல் ரிசர்வ் வங்கிகளிலும், உலக வங்கியிலும் ஆலோசகராகப் பணிபுரிந்தவர் ஆவார். தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், முன்னாள் அதிபர் கிளிண்டனின் ஆட்சியின் போது அரசின் பொருளாதார ஆலோசகராக இருந்தவர்.

“உலக பொருளாதாரம் மீண்டெழ 10 ஆண்டுகள் எடுக்கும் : ஆனால் ஆசிய நாடுகள்...” - டாக்டர் டூம் அதிர்ச்சி தகவல்!

இது தொடர்பாக பிபிசிக்கு டாக்டர் டூம் அளித்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு :

“கொரோனா வைரஸின் பிந்தைய காலகட்டத்தின்போது பெரிய அளவிலான வேலையிழப்புகள் ஏராளமாக நிகழக்கூடும். முன்பிருந்தது போன்று ஆள் எடுப்பது தவிர்க்கப்படும். ஓராண்டுக்குள் உலகப் பொருளாதாரம் மீண்டுவிட்டதாக கூறினாலும் அது முற்றிலும் வலுவிழந்ததாகவே இருக்கக்கூடும். புதிதாக வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கான ஊதியம் என்பது இருக்காது.

இந்த கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவில் இருந்து மீண்டு வருவது என்பது அத்தனை எளிதானதாக இருக்காது. பொருளாதார தேவைக்காக கடைகள், சந்தைகள் திறக்கப்பட்டாலும் மக்களுக்கு கொரோனா மீது இருக்கக்கூடிய அச்சத்தின் காரணமாக பொருட்கள் வாங்குவதில் ஈடுபாடு காட்டமாட்டார்கள்.

அமெரிக்கா, சீனா போன்ற வளர்ச்சி அடைந்த வல்லரசு நாடுகளைக் காட்டிலும் வளர்ந்து வரும் ஆசிய நாடுகள் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட அளவிலான வளர்ச்சியை பெறக்கூடும். சீனா அமெரிக்கா இடையே பிளவு ஏற்படும். அவற்றில் எது வலிமை வாய்ந்தது என தேர்ந்தெடுப்பதில் ஆசிய நாடுகள் தீர்மானிக்கும் நிலையில் இருக்கும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories