உலகம்

ஊரடங்கு காலத்தில் மால்களில் நடந்த கொடுமை - பல லட்சம் மதிப்பிலான தோல் பொருட்கள் பூஞ்சையால் நாசம்!

ஊரடங்கால் மூடப்பட்ட மால்களில் உள்ள பொருட்கள் பூஞ்சைகளினால் கடும் தேதமடைந்துள்ளன.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உலகை அச்சுறுத்திய கொரோனா பாதிப்பு இந்தியாவில் தனது தீவிரத் தன்மையைக் குறைத்துக்கொள்ளவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் இறுதியில் தொடங்கிய ஊரடங்கை 3 வது கட்டமாக நீடித்துள்ளது மத்திய அரசு.

இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக நாழுமுழுவதும் முழு அடைப்பு நீடித்துவருகிறது. இந்த ஊரடங்கில் இருந்து பல தொழில் நிறுவனங்களுக்கு நிபந்தனைளுடன் சில தளர்வுகளை அரசு கொண்டுவந்தது.

ஆனாலும் சென்னை, மும்பை டெல்லி போன்ற பெருநகரங்களில் செயல்படும் மால்களுக்கும், திரையரங்குகளுக்கும் எந்த விதிவிலக்கும் அளிக்கப்படாததால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. மீண்டும் எப்போது திறக்க அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இயங்கி வரும் பிரபல திரையரங்கில் எலிகள் புகுந்து இருக்கை மற்றும் தொழில்நுட்பக் கருவிகளை சேதப்படுத்தியுள்ளது. அதேபோல மலேசியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலான தி மெட்ரோஜயாவில் செயல்பட்டு வந்த தோல் பொருட்கள் விற்பனை நிலையமும் கொரோனா பாதிப்பால் மூடப்பட்டது.

ஊரடங்கு காலத்தில் மால்களில் நடந்த கொடுமை - பல லட்சம் மதிப்பிலான தோல் பொருட்கள் பூஞ்சையால் நாசம்!

அதன் பிறகு தற்போது கடந்த 12ம் தேதி மால் திறக்கப்பட்டபோது அங்கு பணிக்குச் சென்ற ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தோல் பொருட்கள் அனைத்தும் பூஞ்சை பிடித்து பயன்படுத்த முடியாத வகையில் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் அங்கிருந்த தோல் பை, காலனிகள் போன்ற பொருட்களை எடுத்து முடிந்தளவு பாதுகாத்து சுத்தம் செய்து வைத்தனர்.

அங்கு உள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான மதிப்பிலானது எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி குளிர்சாதன வாதி நிறுத்தப்பட்டதால் தோல் பொருட்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், மால்களில் செயல்பட்டு வந்த ஏசி குழாய்களில் ஏதாவது தொற்று பரவி இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் கடைகள் திறக்க அனுமதி கிடைத்தபிறகு நோய் தொற்று பரவாமல் தடுக்கவேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பாதிப்புகளில் பல பொருட்கள் வீணாகப் போக வாய்ப்புள்ளதாக பணியாளர்கள் என்னுகின்றனர்.

banner

Related Stories

Related Stories