Corona Virus

கடைசி நோயாளியும் குணமடைந்து டிஸ்சார்ஜ்.. கொரோனா இல்லாத மாவட்டமானது கோவை.. #CoronaUpdates

சமீப காலங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கோவையில் அனைத்து நோயாளிகளும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளது ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் அண்மைக் காலங்களாக கொரோனா பாதிப்பு நூற்றுக்கணக்கில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ஆனால், முதல் முதலில் மாநிலத்தின் ஹாட் ஸ்பாட்டாக இருந்த ஈரோடு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 70 பேரில் 69 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒரே ஒருவர் மட்டும் உயிரிழந்தது ஏமாற்றமளித்தாலும் பாக்கி 69 பேர் டிஸ்சார்ஜ் ஆனது ஈரோடு மக்களை ஆசுவாசப்பட வைத்துள்ளது. இதனையடுத்து, பச்சை மண்டலமாகவும் உருவெடுத்தது ஈரோடு.

அதேபோல, அண்டை மாவட்டமான திருப்பூரிலும் பாதிக்கப்பட்ட 114 பேரும் குணமடைந்திருக்கிறார்கள். நீலகிரியிலும் பாதிக்கப்பட்ட 15 பேரில் 11 பேரும் குணமடைந்துள்ளதால், சிகிச்சையில் உள்ள எஞ்சிய நால்வரும் விரைவில் வீடு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் தூத்துக்குடி மாவட்டமும் இணைந்துள்ளது.

கோவை பாலம்
கோவை பாலம்

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 146 பேர் பாதிக்கப்பட்டதில் ஒரு உயிரிழப்பு மட்டுமே நேர்ந்தது. ஆகையால், மீதியிருந்த 145 பேருக்கும் சீரான சிகிச்சை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. அதில், கடைசி கொரோனா நோயாளியான கர்ப்பிணி பெண் ஒருவரும் குணமடைந்ததால் தற்போது கொரோனா இல்லாத மாவட்டமாக உருவெடுத்துள்ளது கோயமுத்தூர்.

மாநிலத்தின் தலைநகரான சென்னையை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் சூழலில் தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் கொரோனாவை வீழ்த்தி வருவது தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories