உலகம்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கவலைக்கிடம்? - அமெரிக்க உளவுத்துறை தகவல்!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், இதய அறுவை சிகிச்சைக்கு பின் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கவலைக்கிடம்? - அமெரிக்க உளவுத்துறை தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட விளைவால், கிம் ஜாங் உன்னுக்கு இந்த மாத தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காததால் அவரது உடல்நிலை குறித்து ஏராளமான வதந்திகள் பரவியது.

வடகொரியாவின் தந்தை என அழைக்கப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த நாள் கொண்டாட்டத்திலும் கிம் ஜாங் பங்கேற்கவில்லை. ஆனால். கிம் ஜாங் உன்னின் உடல்நிலை சீராக உள்ளதாக வடகொரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், இதய அறுவை சிகிச்சைக்கு பின், கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மோசமாகவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அதிக உடல் எடை கொண்டதாலும், புகைப்பிடித்தல், வேலை காரணமாகவும் சமீப காலங்களாக கிம்மின் உடல்நிலை மோசமைடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கவலைக்கிடம்? - அமெரிக்க உளவுத்துறை தகவல்!

கடைசியாக பியோங்யாங்கில் நடந்த குறுகிய தூர ஏவுகணை சோதனை நடத்தியபோதும் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை என சியோல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை ஒருவர் கூட வடகொரியாவில் பாதிக்கப்படவில்லை என செய்திகள் வெளியானது. சீனாவில் கொரோனா தாக்கம் தொடங்கிய உடனேயே நாட்டின் அனைத்து கதவுகளையும் கிம் அரசு இழுத்து மூடியது என தெரிவிக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories