உலகம்

"20 பெண்களுடன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட தாய்லாந்து மன்னர்” - கொந்தளிக்கும் மக்கள்! #CoronaVirus

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் தாய்லாந்து மன்னர், 20 பெண்களோடு தன்னை 'தனிமை'ப்படுத்திக் கொண்டுள்ளார்.

"20 பெண்களுடன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட தாய்லாந்து மன்னர்” - கொந்தளிக்கும் மக்கள்! #CoronaVirus
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் தாய்லாந்து மன்னர், தன்னை 'தனிமை'ப்படுத்திக் கொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இயலாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. தாய்லாந்து நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை தாய்லாந்தில் 1,651 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலொங்கோன் என்ற ராமா எக்ஸ், தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதில் என்ன வியப்பு என்கிறீர்களா? இருக்கிறது...

தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலொங்கோன், ஜெர்மனியின் ஜூக்ஸ் ஸ்ப்லிட்ஸ் மலையடிவாரத்தில் உள்ள ஒரு பிரமாண்ட ஹோட்டலில் உள்ள மொத்த அறைகளையும் 'புக்' செய்து, துணைக்கு 20 பெண்களுடன் அங்கு தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"20 பெண்களுடன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட தாய்லாந்து மன்னர்” - கொந்தளிக்கும் மக்கள்! #CoronaVirus

தாய்லாந்து மன்னரை விமர்சித்தால் சிறைத் தண்டனை வழங்கப்படும் எனும் கடுமையான கட்டுப்பாடு அங்கு உண்டு. ஆனாலும், மக்களைத் தாக்கும் கொரோனா தொற்று நடவடிக்கையில் இறங்காமல், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள மன்னரை தாய்லாந்து மக்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தாய்லாந்தை விடுத்து, வெளிநாடுகளிலேயே சுற்றித் திரியும் மன்னருக்கு எதிராக சமீபத்தில் #WhyDoWeNeedKing? எனும் ஹேஷ்டேகை அந்நாட்டு மக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories