உலகம்

கொரோனாவிடமிருந்து 6,400 உயிர்களைக் காப்பாற்றிய மருத்துவர் அதே நோயால் பலியான சோகம் - கலங்கும் ஈரான்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6,400 பேரைக் காப்பாற்றிய ஈரான் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவிடமிருந்து 6,400 உயிர்களைக் காப்பாற்றிய மருத்துவர் அதே நோயால் பலியான சோகம் - கலங்கும் ஈரான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் ஈரான் நாடுகளை கடுமையாக பாதிப்படையச் செய்துள்ளது.

சீனாவை விட மருத்துவ கட்டமைப்பு, மருத்துவர்கள் என சுகாதாரத்துறையில் பின்னடைவில் உள்ள பல நாடுகளில் உயிர்ப்பலிகள் அதிகரித்துள்ளன. இத்தாலியைத் தொடர்ந்து அதிக பாதிப்பை சந்திக்கும் ஈரானில் தற்போதைய கணக்குப்படி 1,433 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஏற்கனவே சின்னாபின்னமாகியுள்ள ஈரான் மருத்துவ கட்டமைப்பில் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில் கொரோனா கடும் விளைவுகளை உண்டாக்கியுள்ளது.

கொரோனாவிடமிருந்து 6,400 உயிர்களைக் காப்பாற்றிய மருத்துவர் அதே நோயால் பலியான சோகம் - கலங்கும் ஈரான்!

அதனால் ஈரான் முழுவதுமே lock Down செய்யப்பட்டுள்ளது. அரசு மக்களைப் பாதுக்காக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனாலும் மருத்துவ பற்றாக்குறையால், இருக்கிற மருத்துவர்களை கூடுதலாக பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது. நிலைமையை உணர்ந்த மருத்துவர்களும் தொடர்சியாக 13 மணிநேரம் வேலை செய்துவருகின்றனர்.

அந்தவகையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 6,400 பேரை காப்பாற்றிய மருத்துவர் ஷிரீன் ரூகானி ராத் என்பவர் தொடர்சியாக பணி, சோர்வு மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும்போது தொற்றிக்கொண்ட கொரோனா என பல இன்னல்களை சந்தித்து தற்போது கொரோனாவால் பலியாகியுள்ளார். இந்தச் செய்தி அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மருத்துவ பற்றக்குறையால் தனக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தும், மக்களை பாதுகாக்க தனது உயிர் பற்றிக் கவலைப்படாமல் பணியாற்றியுள்ளார் மருத்துவர் ஷிரீன் ரூகானி ராத்.

சமீபத்தில் கூட ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்போது, மருத்துவர் ஷிரீன் ரூகானி ராத் தன் கையிலும் intravenous பொருத்தியிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது மறைவுக்கு அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories