உலகம்

மாணவரை சுட்டுக் கொன்ற போலிஸ்;பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட முதியவர்: திசை மாறும் ஹாங்காங் போராட்டம்- வீடியோ

ஹாங்காங் போராட்டத்தின் போலிஸாரும், பொதுமக்களும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவரை சுட்டுக் கொன்ற போலிஸ்;பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட முதியவர்: திசை மாறும் ஹாங்காங் போராட்டம்- வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஹாங்காங் அரசு காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகு, 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் மக்களுக்கென தனி பண மதிப்பு, சட்டம், நிர்வாகம் என இருந்து வருகிறது. ஹாங்காங் சீன அரசுடன் சுமுகமான உறவில் தான் இருந்து வருகிறது.

இந்நிலையில், கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவிற்கு நாடு கடத்தும் மசோதாவை கொண்டுவர ஹாங்காங் அரசு முடிவு செய்தது. இதற்கு ஹாங்காங் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து மக்கள் வீதிகளில் இறங்கி கடந்த மூன்று மாதங்களாக போராடி வந்தனர்.

மக்கள் போராட்டத்திற்குப் பிறகு மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் நிறுத்தி வைத்தது. இருப்பினும் மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெறவேண்டும் என போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். அதனை அடுத்து மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெறுவதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஆனாலும், போராட்டக்காரர்கள் சீனா தலையிடுவதை நிறுத்தவேண்டும், சுதந்திரமாக தேர்தல், போராட்டத்தின் போது சிறையில் உள்ள போராட்டக்காரர்களை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என மற்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். இந்தப் போராட்டத்திற்கு ஹாங்காங் அரசு செவிமடுக்காத நிலையில் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கிவருகின்றனர்.

இந்த போராட்டத்தில் போலிஸாரை போராட்டக்காரர் ஒருவர் தாக்க முயன்றார். அப்போது இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது மற்றொரு கல்லூரி மாணவன் போலிஸாரின் தூப்பாக்கியை பறிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த போலிஸ் தூப்பாக்கியால் மாணவரை நோக்கி சுட்டார். இதில் குண்டடிப்பட்டதில் மாணவன் சம்பவ இடத்தில் மயங்கிவிழுந்தார்.

பின்னர் அம்புலன்ஸ் மூலம் அவரது உடல் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலன்றி மாணவர் உயிரிழந்தார். இந்த செய்தியைக் கேட்ட போராட்டக்காரர்கள் மாணவர் இருந்த மருத்துவமனை முன்பு திரண்டு மாணவனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த சம்பவத்தின் போது மற்றொரு இடத்தில் போராட்டத்தை ஜனநாயக முறையில் நடத்தவேண்டும் என்றும் வன்முறைகளில் ஈடுபடுவதை எதிர்த்துப் போராட்டக்காரர்களிடம் முதியவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அங்கு கூடிய போராட்டக்கார்களில் ஒருவர் திடீரென முதியவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்து எரித்துள்ளார். தீ காயங்களுக்கு ஆளான முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்த போராட்டத்தை அமெரிக்கா பின்னல் இருந்து தூண்டிவிடுவதாகவும், வன்முறைக்கு அமெரிக்காவின் ஆதரவாளர்களே காரணம் என அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த இரு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பலர் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

banner

Related Stories

Related Stories