உலகம்

3 வயது குட்டி யானையை மீட்க சென்ற 6 யானைகள் நீர் வீழ்ச்சிக்குள் விழுந்து பலி! - தாய்லாந்தில் நடந்த சோகம்!

தாய்லாந்தில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆறு யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 வயது குட்டி யானையை மீட்க சென்ற 6 யானைகள் நீர் வீழ்ச்சிக்குள் விழுந்து பலி! -  தாய்லாந்தில் நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த சில ஆண்டுகளாக யானையின் உயிரிழப்புகள் அதிகரித்தபடியே உள்ளது. மனிதர்களின் தவறுகளாலும், இயற்கை சூழலையும் எதிர்க்கொள்ள முடியாலும் யானைகள் உயிரிழந்து வருகின்றன. தந்தங்களுக்காக கொல்லப்படுவது, ரயில் பாதையை கடக்கும் போது அடிபட்டு இறப்பது என தினம் ஒரு செய்தி வந்தபடி உள்ளது.

இந்நிலையில், 6 யானைகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தாய்லாந்தில் நடந்துள்ளது. தாய்லாந்த் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கா யோ என்ற தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவை தாய்லாந்து வனத்துறை மற்றும் வனவிலங்கு காப்பகம் பராமரித்து வருகின்றன. இந்த வனத்துக்குள் 'ஹாய் நரோக்'(ஹெல் அபிஸ்) எனும் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இந்த பூங்காவின் மிக பெரிய வனபகுதியிருப்பதால் ஏராளமான யானைகளின் வழித்தடமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில், அருவி பகுதியில் இருந்து இரண்டு யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டுள்ளது. நீண்ட நேரமாக கேட்ட பிளிறல் சத்ததால் என்ன ஆனது என வனப் பாதுகாப்பு காவலர்கள் சென்று பார்த்துள்ளனர்.

உயிரிழந்த யானைகள்
உயிரிழந்த யானைகள்

அங்கு 2 யானைகள் நீண்ட நேரமாக பறைகளின் நடுவே சிக்கி தவித்துவந்தது தெரிய வந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் காலையில் ரோந்து பணியின் போது பள்ளத்தில் பார்வையிட்டப்போது தான் அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளத்தில் விழுந்து6 யானைகள் இறந்துக்கிடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ந்துபோன பாதுகாப்பு காவலர்கள் உடல் சிதறி உயிரிழந்த யானைகளை ஒவ்வென்றாக மேலே எடுத்துவந்தனர். இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கண்ணீர் மல்க யானைகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

வனத்திற்குள் இருந்த 3வயது குட்டியானை தவறி நீர்விழ்ச்சிக்குள் விழுந்திருக்கலாம் என்றும் அதனைக் காப்பாற்ற மற்ற யானைகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சென்று உள்ள விழுந்து இறந்திருக்கலாம் என்றும் வனத்துறையினர் யூகிக்கின்றனர்.

குட்டி யானையைக் காப்பாற்ற சென்று ஒன்றன் பின் ஒன்றாக 5 யானைகள் உயிரிழந்திருப்பது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories