உலகம்

“இனி சவுதி அரேபியாவிற்கு சுற்றுலா செல்லலாம்” : புதிய மாற்றங்களுடன் விசா வழங்கத் தயாராகும் சவுதி அரசு!

சவுதி அரேபியா அரசு முதன்முறையாக சுற்றுலாப் பயணிகளுக்கான விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளது.

 “இனி சவுதி அரேபியாவிற்கு சுற்றுலா செல்லலாம்” : புதிய மாற்றங்களுடன் விசா வழங்கத் தயாராகும் சவுதி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வளைகுடா பகுதியில் இருக்கும் முஸ்லிம் நாடான சவுதி அரேபியா தமது வளர்ச்சிக்காக பெட்ரோலிய கச்சா எண்ணெய் மட்டுமின்றி, சுற்றுலா மூலமும் வருவாயைப் பெருக்க முடிவு செய்துள்ளது.

சவுதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசராக மன்னர் சல்மானின் இளைய மகன் முகமது பின் சல்மான் சமீபத்தில் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற நாள் முதல் அரசின் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பல புதிய திட்டங்களையும், நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கியது, 40 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது, விண்வெளித் திட்டம் - கேளிக்கை விடுதிகளுக்குப் பெண்கள் அனுமதி எனப் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனர். மேலும், பெண்கள் யார் அனுமதியும் இன்றி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் சமீபத்தில் அறிவித்தார்.

இதுபோல சீர்திருத்தப்பணிகளை 2030-ம் ஆண்டுக்குள் அதிகப்படுத்த இருப்பதாவும் இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்ததாக தகவல் வெளியாகின. இந்நிலையில் தற்போது வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா வழங்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதுவரை சவுதி அரேபியா அரசு சுற்றுலா விசா வழங்க மறுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 “இனி சவுதி அரேபியாவிற்கு சுற்றுலா செல்லலாம்” : புதிய மாற்றங்களுடன் விசா வழங்கத் தயாராகும் சவுதி அரசு!

மேலும் இதுதொடர்பாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் கூறுகையில், “எங்கள் நாட்டில் முதன்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் சில முடிவுகளைத் தொடர்ந்து எடுத்துவருகின்றோம். அதன்படி சுற்றுலா விசா வழங்க உள்ளோம். இங்கு வரும் பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்படப் போவதில்லை.

அவர்கள் விருப்பமான ஆடைகளையே அணியலாம். மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் விதிமுறையின் கீழ் மது விற்பனை செய்யப்படும். அதுமட்டுமின்றி, யுனெஸ்கோவின் 5 முக்கிய இடங்கள் இங்கு உள்ளது. அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது 49 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு ஆன்லைன் மூலமே விசா வழங்க முடிவு செய்துள்ளோம். அந்தப் பணி செப்டம்பர் 28ம் தேதி முதல் தொடங்கும்.

49 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் விசா வழங்கும் திட்டம் இன்று முதல் (செப்டம்பர் 27) செயல்படுத்தப்படும். இதன் மூலம் 10 கோடி வெளிநாட்டுப் பயணிகள் வந்துசெல்லும் வகையில் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories