உலகம்

ஒய்யாரமாக வலம் வரும் ‘ராஜா’ யானைக்கு  24 மணிநேரமும் இராணுவப் பாதுகாப்பு - ஏன் தெரியுமா?

இலங்கையில் நீளமான தந்தங்களுடன் வலம்வரும் யானை நடுங்கமுவா ராஜாவுக்கு 24 மணிநேரமும் இராணுவப் பாதுகாப்பு அளிப்பட்டுள்ளது.

ஒய்யாரமாக வலம் வரும்  ‘ராஜா’ யானைக்கு  24 மணிநேரமும் இராணுவப் பாதுகாப்பு - ஏன் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இலங்கை நாட்டின் கண்டி பகுதியில் சிறப்புவாய்ந்த புத்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா போது புத்தர் சிலைக்குத் தேவையான பூசை பொருள்களை நடுங்கமுவா ராஜா என்ற யானைக் கொண்டுசெல்லும். அதனால் அந்த யானைக்கு சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

65 வயதான நடுங்கமுவா ராஜாவுக்கு 24 மணி நேரமும் இராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக உடன் வருவார்கள். கடந்த 2015ம் ஆண்டு இந்த யானைக்கு காயம் ஏற்பட்ட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தக் காயம் வாகனம் மோதி ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது இரு சக்கர வாகனம் ஒன்று மோதியுள்ளது தெரியவந்தது. பின்னர் இலங்கை அரசே ராஜாவுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்து உத்தரவிட்டது. அதன்படி, தற்போது நடைபெறும் விழாவிற்காக ராஜாவை தாயார் படுத்திவருகின்றனர்.

மேலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களும் இரண்டு பாதுகாப்பு உதவியாளர்களும் உள்ளனர். அங்குள்ள மக்களும் ராஜாவுக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகின்றனர். இராணுவ மரியாதையுடன் ராஜா பாதுகாக்கப்படுவதால் தனி சிறப்புகளைப் பெற்றுள்ளது. மேலும் யானைக்கு இராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆனால், இதே கோவில் திருவிழாவில் அணிவகுப்புக்குப் பயன்படுத்தப்படும் டிக்கிரி எனும் யானை சரியான பராமரிப்பில்லாமல் எலும்பும் தோலுமாக இருந்து சமீபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories