உலகம்

“How Dare You” - ஐ.நா கூட்டத்தில் உலகத் தலைவர்களை கடுமையாகச் சாடிய இளம் சூழலியல் போராளி கிரேட்டா!

இளம் சூழலியல் போராளி கிரேட்டா தன்பெர்க், ஐ.நா கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

“How Dare You” - ஐ.நா கூட்டத்தில் உலகத் தலைவர்களை கடுமையாகச் சாடிய இளம் சூழலியல் போராளி கிரேட்டா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க். பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காக்க, உலகத்தலைவர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவாக பல நாடுகளைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் இணைந்துள்ளனர். குறிப்பாக, இவரின் தலைமையில் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆசிய பசிபிக் போன்ற நாடுகளில் பள்ளி மாணவர்கள் 'கடல் மட்டம் உயர்ந்து வருகிறது', ‘நமக்கு வேறு உலகம் இல்லை’ என எழுதப்பட்ட பதாகைகளுடன் பேரணி சென்றனர்.

உலக நாடுகளில் மொத்தம் 110 நகரங்களில் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இந்தப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பங்கேற்றனர். இதன்மூலம் கிரேட்டா தன்பெர்க் உலக நாடுகளில் பிரபலமானார்.

“How Dare You” - ஐ.நா கூட்டத்தில் உலகத் தலைவர்களை கடுமையாகச் சாடிய இளம் சூழலியல் போராளி கிரேட்டா!

இந்நிலையில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா சபை தலைமை அலுவலகத்தில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கு பெற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் கிரேட்டா தன்பெர்க் பங்கேற்றார். அப்போது பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இளம் தலைமுறையினரை உலக தலைவர்கள் ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர்,“நாங்கள் உங்களை கவனித்து வருகின்றோம். உலகம் முழுவதும் அனைத்தும் தவறாக நடந்து கொண்டு இருக்கிறது. நான் தற்போது இங்கு இருக்கக் கூடாது கடலின் மறுபக்கம் உள்ள எனது பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கவேண்டும்.

நாம் அனைவரும் பேரழிவின் விளிம்பில் இருக்கின்றோம். ஆனால் அதனை உணராமல் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை பற்றி இங்கு பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?

நீங்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க முயற்சி எடுக்கவில்லை என்றால் நீங்கள் அரக்கர்களாகத் தான் இருப்பீர்கள். தற்போது உலகம் எதிர்கொண்டிருக்கும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து எந்த ஒரு திட்டமும் தடுக்கும் நடவடிக்கை குறித்த தீர்வும் இந்த ஐ.நா கூட்டத்தில் சமர்ப்பிக்கவில்லை. இதை ஏன் கட்டுப்படுத்த முயற்சி செய்யவில்லை?

இந்த துரோகத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம். எங்கள் தலைமுறையின் பார்வை உங்களை நோக்கிதான் உள்ளது. நீங்கள் எங்களை தோல்வி அடையச் செய்யலாம் என நினைத்தால் உங்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டோம்” என்று அவர் பேசினார். அவரது பேச்சால் உலகத் தலைவர்கள் அதிர்ந்துபோயுள்ளனர்.

மேலும், கிரேட்டா தன்பெர்க் ஆக்ரோஷமாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலரும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories