உலகம்

“இதுதான் காதலா?” : மனைவி உறங்குவதற்காக 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவர்!

மனைவி தூங்குவதற்குகாக 6 மணி நேரமாக நின்றபடி விமானத்தில் பயணம் செய்த கணவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

“இதுதான் காதலா?” : மனைவி உறங்குவதற்காக 6 மணி நேரம் நின்றபடி பயணம் செய்த கணவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விமானத்தில் மனைவி தூங்குவதற்குகாக தன் இருக்கையை விட்டுக்கொடுத்து 6 மணிநேரமாக எழுந்து நின்றபடி பயணம் செய்யும் ஒருவரின் புகைப்படக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவில் உள்ள இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவர் கர்ட்னி லீ ஜான்சன். இவர் விமானத்தில் பயணம் செய்யும்போது தான் கண்ட காட்சியை சிலிர்த்து போய் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், “மனைவி நிம்மதியாக உறங்கவேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட ஆறு மணி நேரமாக இந்த மனிதர் நின்றுகொண்டே பயணம் செய்கிறார். இதுதான் உண்மையாக காதல்” என கூறிப்பிட்டுள்ளார். அந்த விமானம் எங்கிருந்து சென்றது என எந்த தகவல் குறிப்பிடப்படவில்லை.

இதனையடுத்து மனைவி மீது வைத்திருக்கும் அன்பு மிக ஆழமானது என பலர் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிலர் அந்த பெண் சுயநலத்துடன் நடந்து கொண்டதாகவும் கூறுகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories