உலகம்

அமேசான் காட்டுத்தீயிலிருந்து வெளியான அச்சுறுத்தும் கார்பன் மோனாக்சைடு : நாசா  ‘பகீர்’ தகவல்!

அமேசான் காட்டுத்தீயால், அச்சுறுத்தும் கார்பன் மோனாக்சைடு வளிமண்டலத்தில் பரவியுள்ளதாக நாசா கண்டறிந்துள்ளது.

அமேசான் காட்டுத்தீயிலிருந்து வெளியான அச்சுறுத்தும் கார்பன் மோனாக்சைடு : நாசா  ‘பகீர்’ தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அமேசான் மழைக்காடுகள் தொடர்ந்து எரிந்து வருவதால் உருவாகியிருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய கார்பன் மோனாக்சைடு வளிமண்டலத்தில் அடர்த்தியாகப் பரவியுள்ளதாக நாசா கண்டறிந்துள்ளது.

உலகளவில் மிகப்பெரிய காட்டுப் பகுதியான அமேசான் காடுகளில் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள், அரிய வகை விலங்குகள், பறவைகள் என பலவகை உயிரினங்கள் உள்ளன. அமேசான் காடுகளின் பெரும்பகுதி பிரேசிலிலும், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளிலும் அமைந்துள்ளது.

அமேசான் காடுகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. அடர்ந்த காடு என்பதால் தீயை அணைக்கும் பணிகளில் பிரேசில் பெரும் சவாலைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில்தான், மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கார்பன் மோகாக்சைடு வளிமண்டலத்தில் கலந்திருப்பதாக நாசா அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது.

அமேசான் காட்டுத்தீயிலிருந்து வெளியான அச்சுறுத்தும் கார்பன் மோனாக்சைடு : நாசா  ‘பகீர்’ தகவல்!

கார்பன் மோனாக்சைடு மனிதர்களுக்கு பல்வேறு வகைகளிலும் தீங்கு விளைவிக்கும். அமேசான் காடுகளுக்கு மேலே வளிமண்டலத்தில் கலந்துள்ள கார்பன் மோனாக்சைடு நாளாக நாளாக நகர்ந்து, பல்வேறு திசைகளிலும் பரவி, மக்களுக்கும், அனைத்து வகை உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

கார்பன் மோனாக்சைடு அதன் தாக்கத்தின் அளவைப் பொறுத்து, லேசான தலைவலி, சுவாசப் பிரச்னைகள் தொடங்கி, இறப்பு வரை இட்டுச் செல்லக்கூடிய அளவுக்கு அபாயகரமானது. காற்றுடன் கலந்துள்ள கார்பன் மோனாக்சைடு பொலிவியா, பிரேசில் நாட்டு மக்களுக்கு பல்வேறு ஆபத்துகளையும் உண்டாக்கக்கூடும் எனவும் நாசா எச்சரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories