உலகம்

அமேசான் காட்டுத்தீ : கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்த பழங்குடியினர் - திரை மறைவில் இருக்கும் அரசியல் ?

அமேசான் காட்டுத்தீ சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என பழங்குடியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமேசான் காட்டுத்தீ : கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்த பழங்குடியினர் - திரை மறைவில் இருக்கும் அரசியல் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு அமேசான் மழைக் காடுகள் பெரும் பங்கினை வகிக்கிறது. ஆனால், இந்த காடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு மட்டும் அதிகமுறை காட்டு தீ உருவாகியுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது இயற்கை நமக்குக் கொடுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்றும் ஈக்குவடார் நாட்டின் பழங்குடியினர் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் கடந்த இரு வாரங்களாக எரிந்து வரும் காட்டுத்தீ உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஈக்குவடார் நாட்டின் எல்லையில் உள்ள பகுதியில் ‘வோராணி பழங்குடியின’ சமூகத்தினர் வாழ்ந்து வருகிறார். இவர்கள் வசிக்கும் அமேசான் காட்டுப்பகுதியில் அதிகம் எண்ணெய் வளம் உள்ளதால் அங்கு தனியார் கார்ப்ரேட் நிறுவனங்கள் அங்கு ஆலை அமைத்து எண்ணெய் வளத்தை அரசாங்கத்தின் உதவியுடன் எடுக்க முயற்சித்துள்ளனர்.

இதற்கு அப்பகுதி பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்புப் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில் எண்ணெய் நிறுவனங்களும் அரசு இணைந்து வளங்களை கொள்ளையடிப்பதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் இதனால் தங்களின் வாழ்வாதரம் பாதிக்கும் உலக நலனின் பெரும் பங்கு வகிக்கும் அமேசான் முற்றிலும் சிதைந்து போகும் என தெரிவித்தனர்.

அமேசான் காட்டுத்தீ : கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்த பழங்குடியினர் - திரை மறைவில் இருக்கும் அரசியல் ?

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசின் கருத்தை ஏற்கவில்லை மேலும் உலக நலன்களை கணக்கில் எடுத்துக்கொண்டும் நீண்ட நாளாக அந்த நிலத்தையே நம்பி பூர்விகமாக வாழும் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பவார்கள் என்பதால் அரசு தற்போது எடுத்துள்ள முயற்சியைக் நிறுத்திக்கொள்ளவேண்டும். பழங்குடியின மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணை மே மாதம் தான் நடைபெற்றது. அடுத்த நான்கு மாதங்களில் இந்த காட்டுத்தீ சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என பழங்குடியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் அமேசான் மழைக் காடுப் பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் சூழலியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல நாடுகள் உதவிக்கு முன்வந்துள்ளனர். ஆனால் நாங்களே பார்த்துக்கொள்கிறோம், உலக நாடுகள் தலையீடவேண்டாம் என பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோ கேட்டுக் கொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ, பொருளாதாரத்தில் உயர்த்துவதற்காக பிரேசில் மழைக்காடுகள் அழிக்கப்படுவதனைக் கண்டுக்கொள்ளாமல் ஆட்சி செய்து வருகிறார் என்று பூர்வ பழங்குடிகள் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெய்ர் போல்சோனரோ, இந்த காட்டுத்தீ விவகாரத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories