உலகம்

நோபல் பரிசு பெற்ற கருப்பின முதல் பெண் எழுத்தாளர் டோனி மாரீசன் மரணம்

உலகப் புகழ்பெற்ற கருப்பின பெண் எழுத்தாளர் டோனி மாரீசன் காலமானார்.

நோபல் பரிசு பெற்ற கருப்பின முதல் பெண் எழுத்தாளர் டோனி மாரீசன் மரணம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

உலக புகழ்பெற்ற நாவலான Beloved Song of Solomon உள்ளிட்ட நாவல்களை எழுதி உலகப்புகழ் பெற்றவர் டோனி மாரீசன். இன விடுதலையை மையமாகக் கொண்டு அவர் எழுதிய நாவல்கள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. டோனி மாரீசன் தனது நாற்பதாவது வயதில் எழுதத் தொடங்கினார். தொடர்ச்சியாக 6 நாவல்களை எழுதி புகழின் உச்சியைத் தொட்டவர்.

1993 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற அவர், BELOVED என்ற நாவலுக்காக புலிட்சர் பரிசினையும் பெற்றவர் என்று குறிப்பிடத்தக்கது. 11 நாவல்களை எழுதி, குழந்தைகளுக்கான படைப்புலகிலும் இயங்கிய அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அன்னாருக்கு வயது 88.

அவரது மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பதிப்பாளர், மற்றும் அவரது குடும்பத்தினர், ‘கறுப்பின மக்களுக்கான தனிமொழியை தமது இலக்கியப் படைப்புகளில் உருவாக்க முயற்சித்தவர் என்றும் அமெரிக்காவின் பன்முக கலாச்சாரத்தை உலகிற்கு உரக்க தெரிவித்தவர்’ என்றும் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories