உலகம்

“என்னா மனுசன்யா..”: 30 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 200 ரூபாயை திருப்பிக்கொடுக்க இந்தியா வந்த கென்யா எம்.பி!

30 ஆண்டுக்களுக்கு முன் மளிகைக்கடைக்காரிடம் வாங்கிய ரூ.200 திருப்பிக் கொடுக்க கென்யா எம்.பி. ரிச்சர்ட் டோங்கி, அவுரங்காபாத் வந்துள்ளார். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“என்னா மனுசன்யா..”: 30 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 200 ரூபாயை திருப்பிக்கொடுக்க இந்தியா வந்த கென்யா எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

30 ஆண்டுக்களுக்கு முன் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார் ரிச்சர்ட் டோங்கி. அப்போது அருகில் இருந்த மளிகை கடைக்காரரிடம் அவ்வப்போது கடன் வாங்குவதும் அதை திருப்பி கொடுப்பதுமாக இருந்துள்ளார்.

கென்யாவில் உள்ள நயரிபரி சாச்சே தொகுதியைச் சேர்ந்த எம்.பி. ரிச்சர்ட் டோங்கி, தனது இளைமைகாலத்தில் உதவி செய்தவரை சந்திக்க இந்தியா வந்துள்ளார். 30 ( 1985-89 ) ஆண்டுக்களுக்கு முன் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார் ரிச்சர்ட் டோங்கி. அப்போது ரிச்சர்ட் வான்கடே நகர் பகுதியில் தங்கிருந்தார். அவர் தங்கியிருந்த வீதியில் காஷினாத் கவ்லி என்பவர் மளிகைக்கடை நடத்தி வந்துள்ளார்.

அப்போது அருகில் இருந்த மளிகை கடைக்காரரிடம் அவ்வப்போது கடன் வாங்குதும் அதைத் திருப்பி கொடுப்பதுமாக இருந்துள்ளார். கடைசியாக மளிகை கடைக்காரரிடம் இருந்து ரூ.200 கடன் வாங்கியுள்ளார். ஆனால், அதை திருப்பி கொடுக்காமல் படிப்பை முடித்துவிட்டு கென்யா திரும்பியுள்ளார்.

“என்னா மனுசன்யா..”: 30 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 200 ரூபாயை திருப்பிக்கொடுக்க இந்தியா வந்த கென்யா எம்.பி!

எனவே இப்போது அந்த ரூ.200 திரும்பி கொடுக்க தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்து தனக்கு கடன் கொடுத்த மளிகைக் கடைக்காரரை அவுரங்காபாத்தில் தேடி அலைந்துள்ளார். பின்னர் அவர் வீட்டை கண்டுபிடித்து வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்துள்ளார்.

கென்யா எம்.பி. சந்திப்பு குறித்து கவ்லி கூறும்போது, "இந்த சம்பவம் எனக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சியை அளித்துள்ளது. எனது கண்களை என்னால் நம்ப முடியவில்லை"என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து கென்யா எம்.பி ரிச்சர்ட் கூறுகையில், “இது ஒரு உணர்ச்சிபூர்வமான பயணம். எனக்கு உதவிய கவ்லியைச் சந்தித்தபோது அவர் கண்ணீருடன் இருந்தார். முன்னதாக அவுரங்காபாத்தில் ஒரு மாணவராக இருந்தபோது மிகுந்த வறுமையில் இருந்தேன். அப்போது கவ்லி எனக்கு அவ்வப்போது உதவி செய்தார். அதை என்னால் மறக்கவே முடியாது.

அவரிடம் கடைசியாக வாங்கிய பணத்தை மறு பயணம் செய்யும்போது கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் எனது மறுபயணம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமைந்துள்ளது. தற்போது அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு உதவி செய்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்".

மேலும், கவ்லி குடும்பத்தினர் என்னையும் என் மனைவியையும் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல விரும்பினார்கள், ஆனால் நாங்கள் அவர்களின் வீட்டில் சாப்பிடவேண்டும் என்று வலியுறுத்தினேன்," என அவர் தெரிவித்தார்.

அவுரங்காபாத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு மளிகைக் கடைக்காரரின் குடும்பத்தினருக்கு கென்யா வரும்படி அழைப்பும் விடுத்துவிட்டுச் சென்றுள்ளார் ரிச்சர்ட்.

banner

Related Stories

Related Stories