உலகம்

ஆஸ்திரேலிய பொதுத்தேர்தல் : மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் ஸ்காட் மோரிசன்!

தற்போதைய நிலவரப்படி, ஆளும் கூட்டிணைவுக் கட்சியே அங்கு அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய பொதுத்தேர்தல் : மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் ஸ்காட் மோரிசன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, ஆளும் கூட்டிணைவுக் கட்சியே அங்கு அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தத் தேர்தலில் 'Coalition' கட்சி சார்பாக பிரதமர் ஸ்காட் மோரிசன் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தொழிலாளர் கட்சியின் பில் ஷார்டன் போட்டியிட்டார்.

151 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 76 இடங்கள் தேவை. ஆளும் கூட்டிணைவுக் கட்சி இதுவரை 74 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 66 இடங்களைப் பெற்றுள்ளது.

இன்னும் 2 இடங்கள் மட்டுமே வெற்றிக்குத் தேவை எனும் நிலையில் கூட்டிணைவுக் கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளது. தோல்வியைத் தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் தலைவர் பில் ஷார்டன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories