உலகம்

ஏவுகணை சோதனை தொடர்ந்து வடகொரியா கப்பலை பறிமுதல் செய்தது அமெரிக்கா! முற்றுகிறதா மோதல்?

கடந்த வாரம் வடகொரியா ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து, அந்நாட்டு சரக்கு கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏவுகணை சோதனை தொடர்ந்து வடகொரியா கப்பலை பறிமுதல் செய்தது அமெரிக்கா! முற்றுகிறதா மோதல்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வட கொரியா சர்வதேச தடைகளை மீறியதாக குற்றம்சாட்டி அந்நாட்டு சரக்கு கப்பளை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.

ஐ.நா வித்தித்துள்ள தடைகளை மீறி செயல்பட்டதாகவும், வட கொரியா அதிக அளவில் நிலக்கரியை ஏற்றுமதி செய்ய இந்த கப்பலை பயன்படுத்தியதற்காகவும் அமெரிக்க சட்டத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சர்வதேச தடைகளை மீறியதாக வட கொரிய கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்தது இதுவே முதல்முறையாகும்.

ஏவுகணை சோதனை தொடர்ந்து வடகொரியா கப்பலை பறிமுதல் செய்தது அமெரிக்கா! முற்றுகிறதா மோதல்?

மேலும் கடந்த வாரத்தில் இரண்டு முறை ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியது. இது தற்காப்புக்காக நடத்தப்பட்ட பயிற்சிதான் என வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரியில், வியட்நாமின் தலைநகர் ஹனோயில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே பேச்சு வார்த்தை ஈடுபட்டது. இந்த சந்திப்பில் உடன்பாடு எதுவும் எட்டாத எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிந்தது.

அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உறவுகள் தொடர்ந்து மோசமான சூழல் உருவாகிவருகிறது.

banner

Related Stories

Related Stories