வைரல்

திடீரென சாய்ந்த 120 அடி உயர தேர்.. 2 பேர் பரிதாப பலி.. 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் -கர்நாடகாவில் ஷாக்!

திடீரென சாய்ந்த 120 அடி உயர தேர்.. 2 பேர் பரிதாப பலி.. 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் -கர்நாடகாவில் ஷாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே ஹுஸ்கூர் என்ற கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் அம்மனுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின்போது 100-க்கும் மேற்பட்ட அடி உயரத்தில் தேர் ஊர்வலம் வரும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சுமார் 120 அடி உயரத்தில் அடியில் இரண்டு தேர்களை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அப்போது இந்த தேருடன் சேர்த்து நாகமங்களா மற்றும் ராயசந்திரா சாமி தேர்களும் வந்தன. அந்த சமயத்தில் பலத்த காற்றுடன் மழையும் பெய்துள்ளது.

திடீரென சாய்ந்த 120 அடி உயர தேர்.. 2 பேர் பரிதாப பலி.. 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் -கர்நாடகாவில் ஷாக்!

இந்த சூழலில் இந்த பலத்த காற்றால், அந்த 120 அடி உயரம் கொண்ட தேர்கள் சட்டென்று சாய்ந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். மேலும் தேரின் அடியில் 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் சாலையோரம் இருந்த வீடுகளும் சேதமடைந்தன.

இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories