வைரல்

வெளுக்கும் மழையிலும் பைக்கில் சென்ற பெண்ணுக்கு பாலியல் சீண்டல்... பாதுகாப்பில்லாத பாஜக ஆளும் உ.பி.!

வெளுக்கும் மழையிலும் பைக்கில் சென்ற பெண்ணுக்கு பாலியல் சீண்டல்... பாதுகாப்பில்லாத பாஜக ஆளும் உ.பி.!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போது வட மாநிலங்களில் பருவமழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. அண்மையில் கூட தலைநகர் டெல்லியில், ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்திற்குள் வெள்ள நீர் புகுந்து 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குஜராத், உ.பி., அயோத்தி, அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் உத்தர பிரதேசத்தின் லக்னோ அருகே கோமதி நகர் தாஜ் ஹோட்டல் பாலம் அருகே பெய்த கனமழையால் வெள்ள நீர் சாலைகளிலும் தேங்கி இருந்தது. இந்த சூழலில் சம்பவத்தன்று சகோதர, சகோதரிகள் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் அந்த வெள்ள நீர் தேங்கிய சாலையில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த 15-க்கும் மேற்பட்ட கும்பல், அவர்கள் மீது சாலையில் இருந்த நீரை எடுத்து ஊற்றியுள்ளனர்.

வெளுக்கும் மழையிலும் பைக்கில் சென்ற பெண்ணுக்கு பாலியல் சீண்டல்... பாதுகாப்பில்லாத பாஜக ஆளும் உ.பி.!

மேலும் அந்த பெண்ணை அங்கிருந்த நபர் ஒருவர் ஆபாசமாக தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இந்த மோசமான துன்புறுத்தலில் அந்த சகோதர - சகோதரி பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். அந்த பெண்ணை பாலியல் சீண்டல் செய்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலத்த கண்டனங்களை எழுப்பியது.

நேற்று (ஜூலை 31) நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், உ.பி பாஜக அரசுக்கு கண்டனங்களையும் எழுப்பி வரும் நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுமார் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதி காவல் நிலையத்தில் உள்ள காவல்துறையினர் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலங்களில் பாஜக ஆளும் குஜராத்தும், உத்தர பிரதேசமும் முன்னிலை வகித்து வரும் நிலையில், தற்போது கனமழை வெள்ளத்திலும் கூட பெண்களுக்கு அங்கே பாதுகாப்பில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories