வைரல்

பறக்கும் விமானத்தில் கொடுக்கப்பட்ட Sandwich... ஆசையாய் சாப்பிட்ட பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி !

விமானத்தில் கொடுக்கப்பட்ட Sandwich-ஐ சாப்பிடும்போது அதில் Screw இருந்துள்ள சம்பவத்தால் பயணி அதிர்ச்சியடைந்துள்ளார்.

பறக்கும் விமானத்தில் கொடுக்கப்பட்ட Sandwich... ஆசையாய் சாப்பிட்ட பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து Indigo விமானம் சென்னை வருவது வழக்கம். அப்போது பயணி ஒருவர் கடந்த பிப் 1-ம் தேதி இதே விமானத்தில் பெங்களுருவில் இருந்து சென்னைக்கு பயணித்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு விமானம் சார்பில் Sandwich கொடுக்கப்பட்டது. அப்போது அதனை சிறிது நேரம் கழித்து சாப்பிடலாம் என வைத்திருந்த அந்த பயணி, சென்னை வந்ததும் அதனை சாப்பிட்டுள்ளார்.

பறக்கும் விமானத்தில் கொடுக்கப்பட்ட Sandwich... ஆசையாய் சாப்பிட்ட பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி !

அப்போது அதில் பெரிய இரும்பு திருகு (Screw) இருந்துள்ளது. இதனை கண்ட அந்த பயணி அதிர்ச்சியடைந்து உடனே புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்களோ இதற்கு தங்களால் எதுவும் செய்யமுடியாது என்று மன்னிப்பு கூட கேட்காமல் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

இதனால் அந்த பயணி வேறு வழியின்றி இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து புகாரோடு சேர்த்து வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த விஷயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவையடுத்து பலரும் இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருவதோடு, உணவு பாதுகாப்புத் துறையிடம் புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றனர். இண்டிகோ சேவைக்கு பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories