வைரல்

Operation Theatre-ல் Wedding Photoshoot... அரசு மருத்துவர் செய்த அசம்பாவிதத்தால் நேர்ந்த சோகம் !

Operation Theatre-ல் Wedding Photoshoot எடுத்த அரசு மருத்துவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

Operation Theatre-ல் Wedding Photoshoot... அரசு மருத்துவர் செய்த அசம்பாவிதத்தால் நேர்ந்த சோகம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலகட்டத்தில் திருமணத்தின்போது, அதற்கு முன்போ அல்லது பின்போ ஜோடிகள் Photoshoot எடுப்பது வழக்கமாக உள்ளது. அதனை தங்கள் முக்கியமான ஞாபகங்களாக கருதுகின்றனர். இப்படி தம்பதிகள் Photoshoot எடுக்கும்போது பல சுவாரஸ்ய நிகழ்வுகளும், சில கோரமான நிகழ்வுகளும் நிகழ்கிறது.

அதன்படி சில தம்பதிகள் ஆற்றங்கரையில் நின்றோ, மலையில் நின்றோ போட்டோஷூட் செய்யும்போது தவறி உயிரிழந்த விவகாரங்களும் உள்ளது. அதே போல் போட்டோஷூட்டின்போது ஆபத்தான விஷயங்களை செய்தும் சிக்கலில் சிக்கி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நாள்தோறும் உலகம் முழுக்க நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

Operation Theatre-ல் Wedding Photoshoot... அரசு மருத்துவர் செய்த அசம்பாவிதத்தால் நேர்ந்த சோகம் !

அந்த வகையில் தற்போது மருத்துவர் ஒருவர் தனது Wedding Photoshoot-ஐ மருத்துவமனையின் Operation Theatre-ல் வைத்து எடுத்துள்ளார். அவருக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது. கர்நாடக மாநிலம் சித்ரதுர் அருகே உள்ள பரமசாகர் என்ற பகுதி உள்ளது. இங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் அபிஷேக் என்ற மருத்துவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்த சூழலில் இவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. எனவே இதற்கான ஏற்பாடுகள் அவரது குடும்பத்தினர் செய்து வந்தனர். இவரும் தனது வருங்கால மனைவியுடன் போட்டோஷூட் எடுக்க எண்ணியுள்ளார். அதன்படி சம்பவத்தன்று புகைப்படம் ஈடுபவரையும் தனது வருங்கால மனைவியையும் தான் பணிபுரியும் மருத்துவன்மைக்கு அழைத்து வந்துள்ளார்.

Operation Theatre-ல் Wedding Photoshoot... அரசு மருத்துவர் செய்த அசம்பாவிதத்தால் நேர்ந்த சோகம் !

வித்தியாசமான முறையில் Photoshoot எடுக்க எண்ணிய இவர், நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது போட்டோஷூட் எடுக்க நினைத்துள்ளார். அதன்படி அனைவரும் அந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் இடத்தில் இருந்து போட்டோஷூட் எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அறுவை சிகிச்சை வார்டில் ஒருவருக்கு, அந்த மருத்துவர் அபிஷேக் அறுவை சிகிச்சை செய்வது போலவும், மருத்துவருக்கு அவரது வருங்கால மனைவி மருத்துவ உபகரணங்கள் எடுத்துக் கொடுத்து, உதவி செய்வது போலவும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் பூதாகரமான நிலையில், அரசு மருத்துவர் அபிஷேக்கை பணியிடை நீக்கம் செய்து சித்ரதுர்கா மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். சமூக பொறுப்பின்மையோடு நடந்துகொண்ட மருத்துவரின் செயலுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories