வைரல்

64 வயது பெண்ணின் காதில் 4 நாட்கள் வசித்து வந்த சிலந்தி : அதிர்ச்சி சம்பவம்!

தைவானில் 64 வயது பெண்ணின் காதில் 4 நாட்கள் சிலந்தி வசித்து வந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

64 வயது பெண்ணின் காதில் 4 நாட்கள் வசித்து வந்த சிலந்தி : அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தைவான் நாட்டை சேர்ந்த 64 வயது பெண்ணின் காதில் தொடர்ந்து நான்கு நாட்களாக வலி இருந்துள்ளது. மேலும் அசைவின் உணர்வும் இருந்ததால் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவரது காதில் 3 மில்லி மீட்டர் அளவு கொண்ட சிறிய சிலந்தி ஒன்று உயிருடன் இருந்ததைக் கண்டுப்பிடிக்கப்பட்டது. பிறகு மருத்துவர்கள் சிலந்தியை வெளியே எடுக்க முயற்சி செய்தனர்.

ஆனால் சிறிய அளவில் சிலந்தி இருந்ததால் அதை வெளியே எடுக்க முடியாமல் மருத்துவர்கள் சிரமப்பட்டுள்ளனர். பிறகு பிரத்யேக ட்யூப் மூலம் சிலந்தியை வெளியே எடுத்தனர். இதையடுத்து அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் பென்சில்வேனியாவில் 14 வயது சிறுமியின் காதில் ஜப்பானிய வண்டு ஒன்று இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்து வெளியே எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories