இந்தியா

”பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறல்”: மன்னிப்பு கேட்ட பிரபல நடிகரும் பாஜக நிர்வாகியுமான சுரேஷ் கோபி!

பெண் பத்திரிகையாளரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட பா.ஜ.க கட்சியை சேர்ந்த பிரபல நடிகர் சுரேஷ் கோபிக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

”பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறல்”: மன்னிப்பு கேட்ட பிரபல நடிகரும் பாஜக நிர்வாகியுமான சுரேஷ் கோபி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் சுரேஷ் கோபி. பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், கோழிக்கோட்டில் சுரேஷ் கோபி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பெண் ஊடகவியாளர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். அப்போது அவர், பதில் அளித்துக் கொண்டே அந்த பெண்ணின் தோளில் கைவைத்துள்ளார்.

உடனே அப்பெண் தடுத்து விடுகிறார். இருப்பினும் மீண்டும் சுரேஷ் கோபி பெண் ஊடகவியலாளர் தோளில் கைவைக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி கடும் கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து சுரேஷ்போபி தனது முகநூல் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

அதில், "பொது இடங்களிலோ அல்லது வாழ்க்கையிலோ நான் ஒருபோதும் தகாத முறையில் நடந்து கொண்டதில்லை. இந்த சம்பவத்தில் அந்த பெண் பத்திரிகையாளரின் உணர்வுகளை மதிக்கிறேன். எனது நடவடிக்கை அவரை புண்படுத்துவதாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories