வைரல்

சகோதரனுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்த பெண்.. ரக்‌ஷா பந்தன் தினத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

ரக்ஷா பந்தன் தினத்தில் தனது சகோதரனுக்கு தனது சிறு நீரகத்தைத் தானமாக வழங்க முன்வந்ததன் மூலம் தனது அன்பைச் சகோதரி வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரனுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்த பெண்.. ரக்‌ஷா பந்தன் தினத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் தங்கர். இவரது சகோதரி ஷீலாபாய். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஓம்பிரகாஷ் தங்கர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வருகிறார்.

அது குறித்து மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டபோது, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தால் தான் அவரது உயிரைக் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு பொருத்தமான சிறுநீரகத்திற்கான டோனரும் தேவை எனவும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

சகோதரனுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்த பெண்.. ரக்‌ஷா பந்தன் தினத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

இதனால் அவரது உறவினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வேதனையில் இருந்து வந்தனர். இந்நிலையில் அவரது சகோதரி ரக்ஷா பந்த் தினத்தில் சகோதரன் ஓம்பிரகாஷ் தங்கர் கையில் ராக்கி கட்டி தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்குவதாகக் கூறினார். இதைக்கேட்டு சகோதரர் கண்ணீருடன் தனது சகோதரியைக் கட்டி அனைத்து தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இதையடுத்து வரும் செப்டம்பர் 3ம் தேதி ஒம்பிரகாஷ் தங்கருக்கு மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. ரக்ஷா பந்தன் தினத்தில் தனது சகோதரனுக்குத் தனது சிறு நீரகத்தைத் தானமாக வழங்க முன்வந்ததன் மூலம் தனது அன்பைச் சகோதரி வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

banner

Related Stories

Related Stories