வைரல்

சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் எப்படி தரையிறங்கும்?.. விளக்கும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

நிலவின் தென்பகுதியில் இன்று மாலை விக்ரம் லேண்டர் தரையிறங்குகிறது.

சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் எப்படி தரையிறங்கும்?.. விளக்கும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிலவு குறித்த ஆராய்ச்சிக்கு கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான் 1 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. அந்த விண்கலம், நிலவின் தென்துருவ பகுதியில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது.

இதனைத் தொடர்ச்சியாக சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்ப இந்தியா முடிவு செய்தது. இதன்படி, சந்திரயான் 2 விண்கலம் 2019ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் 1 போல இல்லாமல், சந்திரயான் 2 விண்கலத்தில் லேண்டர் மற்றும் ஆர்பிட்டர் சாதனத்தை இந்தியா அனுப்பியது. ஆனால் சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொருங்கியது. ஆனால், சந்திரயான் 2-ன் ஆர்பிட்டர் இன்றளவும் நிலவின் வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.

நிலவு தொடர்பான ஆராய்ச்சியை கைவிடாத இஸ்ரோ, சந்திரயான் 3 விண்கலத்தை உருவாக்கியது. இந்த விணிகலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பூமியின் நீள்வட்டப் பாதையில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3ன் உயரம் 5 கட்டங்களாக படிப்படியாக உயர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவின் சுற்று வட்டபாதையை நோக்கி உந்தப்பட்டது. ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது.

சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் எப்படி தரையிறங்கும்?.. விளக்கும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

ஆகஸ்ட் 17ஆம் தேதி உந்துவிசைக் கலனில் இருந்து விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது. ஏற்கனவே நிலவின் சுற்றுப்பாதையில் இயங்கி வரும் சந்திரயான் 2-ன் ஆர்பிட்டரின் தகவல் தொடர்பு அமைப்புடன் விக்ரம் லேண்டர் இணைக்கப்பட்டது. பின்னர் லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.

இந்த லாண்டரில் உள்ள அதிநவீன கேமரா மூலம் தரையிறங்குவதற்கு ஏற்ற இடங்களையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை நிலவின் தென்பகுதியில், விக்ரம் லேண்டரை தரையிறக்க திட்டமிட்டு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது இஸ்ரோ.

இந்நிலையில் விக்ரம் லேண்டார் எப்படி தரையிறங்கும் என கூறும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால்பதிக்கும். நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கும் போது அதன் வேகத்தைக் குறைக்க வேண்டும்.

சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் எப்படி தரையிறங்கும்?.. விளக்கும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

அப்போது உயரமும் படிப்படியாக குறைந்து கொண்டே வரும். இப்படி செய்வதற்குக் காரணம், நிலவில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு மலைமுகடு போன்று இருக்கும். இந்த கரடுமுரடான இடங்களில் லேண்டர் சிக்கினால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இப்படிதான் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நொறுங்கி இருக்க வாய்ப்பு உண்டு. சந்திரயான் 2ல் ஏற்பட்ட தவறுகள் சரி செய்யப்பட்டுள்ளது. இன்று நிச்சயம் சந்திரயான் 3 நிலவில் கால் பதிக்கும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories