வைரல்

iPhone 15 செல்போன் தயாரிப்பு தமிழ்நாட்டில் தொடக்கம்.. விலை குறைய வாய்ப்பு உள்ளதா? - முழு விவரம் இதோ!

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மாடலான iPhone 15 செல்போன் தயாரிப்பை தமிழ்நாட்டில் தொடங்கியது ஃபாக்ஸ்கான் நிறுவனம்!

iPhone 15 செல்போன் தயாரிப்பு தமிழ்நாட்டில் தொடக்கம்.. விலை குறைய வாய்ப்பு உள்ளதா? - முழு விவரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு புதிய தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கு பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆட்சிக்கு வந்த 15 மாதத்திலேயே தமிழ்நாடு அரசு நடத்திய முதலீட்டு மாநாடுகள் மூலமாக 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்று 4 தொழிலதிபர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இப்படி வெளிநாடுகள் வரை சென்று தமிழ்நாட்டிற்கு புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவருவதற்கு தி.மு.க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவிலேயே மிகப்பெரிய ஐ-போன் தயாரிப்பு தொழிற்சாலை ஓசூரில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மாடலான iPhone 15 செல்போன் தயாரிப்பை தமிழ்நாட்டில் தொடங்கியது ஃபாக்ஸ்கான் நிறுவனம்.

iPhone 15 செல்போன் தயாரிப்பு தமிழ்நாட்டில் தொடக்கம்.. விலை குறைய வாய்ப்பு உள்ளதா? - முழு விவரம் இதோ!

Foxconn Technology நிறுவனம் சீனாவில் உள்ள முக்கிய ஆலைகளில் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் உற்பத்தியை தொடங்குகிறது. மேலும் கடந்த வாரம் சீனாவில் இருந்து சில சாதனங்களை ஏற்றுமதி செய்யத்தொடங்கிய நிலையில், இந்தியாவில் இருந்து வரும் புதிய ஐபோன்களின் அளவை விரைவாக அதிகரிக்க Foxconn Technology நிறுவனம் முயற்சிகிறது.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் முதல் விற்பனை நிலையத்தை திறந்தது ஆப்பிள் நிறுவனம், இப்போது இந்திய சந்தைகளில் வேகமாக வளரும் ஆப்பிள் நிறுவனம் நாடு முழுவதும் ஐபோன் ஷோரூம்களை திறக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி அதிகரிப்பதை தொடர்ந்து விரைவில் இந்தியாவில் ஐபோன் விலை குறையவும் வாய்ப்பு உள்ளதாக இத்துறைச் சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories