வைரல்

கோபித்து கொண்டு 150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறிய காதலி.. சமாதானம் செய்ய பின்னாலே சென்ற காதலன்.. நடந்தது?

காதலியை சமாதானம் செய்ய 150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறிய காதலனின் செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோபித்து கொண்டு 150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறிய காதலி.. சமாதானம் செய்ய பின்னாலே சென்ற காதலன்.. நடந்தது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சத்தீஸ்கர் மாநிலம் கௌரேலா-பெந்திரா-மார்வாகி (Gaurela-Pendra-Marwahi) என்ற பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த சூழலில் காதலன் காதலிக்கு இடையே அடிக்கடி சிறு சிறு தகராறு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் சமாதானமாக இருவரும் சென்றுள்ளனர்.

கோபித்து கொண்டு 150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறிய காதலி.. சமாதானம் செய்ய பின்னாலே சென்ற காதலன்.. நடந்தது?

அந்த வகையில் சம்பவத்தன்றும் இருவருக்குள் ஏதோ கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. போனில் பேசிய இவர்கள் சண்டையிட்டு கொண்டுள்ளனர். இதனால் மன உளைச்சல் மற்றும் ஆத்திரம் கொண்ட காதலி தற்கொலை செய்ய எண்ணியுள்ளார். அதன்படி அவர் இருக்கும் இடத்துக்கு அருகே உள்ள மின் கோபுரத்தில் ஏறி காதலனை மிரட்டியுள்ளார். சுமார் 150 அடி உயரத்தில் இருக்கும் அந்த மின் ஏறிய காதலியை காதலன் சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

எனவே அவரும் காதலியின் பின்னாலே சென்று அந்த மின் கோபுரத்தில் ஏறியுள்ளார். அங்கே வைத்து காதலியை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். இதனிடையே அந்த பகுதி வாசிகள் இந்த ஜோடி மேலே நிற்பதை கண்டு அதிர்ந்தனர். கீழே இருந்து இவர்களும் குரல் கொடுத்து கீழே வரும்படி கூச்சலிட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் வரவில்லை.

எனவே இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள் ஜோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் யார் என்ன என்றும் விசாரித்து பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்களும் விரைந்தனர். சுமார் பல மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு மின் கோபுரத்தில் இருந்து அந்த ஜோடி கீழே இறங்கினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 150 அடி உயர மின் கோபுரத்தில் காதலன் - காதலி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories