வைரல்

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை சம்பாதிக்க முடியுமா? : தில்லாலங்கடியை புட்டுபுட்டு வைக்கும் வீடியோ!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நடைபெறும் தில்லுமுல்லுவை இந்த வீடியோ புட்டுப் புட்டு வைக்கிறது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை சம்பாதிக்க முடியுமா? : தில்லாலங்கடியை புட்டுபுட்டு வைக்கும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

rஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் தற்கொலை என்ற செய்தி பத்திரிகையில் தினந்தோறும் இடம்பெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வதுடன் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்யும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து விளம்பரங்களில் சொல்லப்படுவதுபோல் லட்சம் லட்சமாகப் பணத்தை இந்த விளையாட்டில் ஜெயித்து விடமுடியுமா? என்று கேட்டால் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் மக்களின் ஆசைகளைத் தூண்டி அவர்களை ஆன்லைன் ரம்மி விளையாட வைக்கப்படுகிறார்கள்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை சம்பாதிக்க முடியுமா? : தில்லாலங்கடியை புட்டுபுட்டு வைக்கும் வீடியோ!

இந்த உண்மையை Sapien Sangam என்ற யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று புட்டுபுட்டு வைக்கிறது. அந்த வீடியோவில் கூறப்படுவது இதுதான்: -

ஆன்லைன் ரம்மி RNG (Random Number Generator) என்ற அல்காரிதத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. அதாவது எதிரில் விளையாடுபவர்கள் என்ன சீட்டு எடுக்கிறார், பிறகு என்ன எண்கள் வரும் என்பதை விளையாடுபவர்களால் கணிக்க முடியாது.

இந்த விளையாட்டில் பல நேரங்களில் Program செய்யப்பட்ட மிஷின்கள்தான் விளையாடுகிறது. இதனால்தான் சில வெற்றிகளுக்குப் பிறகு யாராலும் தொடர்ந்து வெற்றி பெற முடியவில்லை.

நம் ஆசையைத் தூண்டுவதற்காக முதலில் வெற்றி பெறவைத்து பிறகு விளையாடுபவர்களைத் தோற்கடித்து பணத்தை இழக்க வைக்கிறது. Machine Learning மூலம் நாம் எப்படி விளையாடுகிறோம் என்பதைக் கவனித்து, விளையாடுபவர்களின் சைக்கலாஜிக்கல் விவரங்களையும் கவனித்து அதற்கு ஏற்றாற்போல் விளையாட்டு வடிவமைக்கப்படும். அதாவது நாம் எந்த கார்டை எந்தநேரத்தில் இறக்குவோம் என நமது ஒவ்வொரு அசைவையும் Machine Learning மூலம் கவனிக்கப்படும்.

இதற்காகத்தான் முதலில் ஆன்லைன் ரம்மி விளையாடும்போது பயிற்சிக்கு என்று சில போட்டிகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த விளையாட்டிலிருந்து நாம் வெளியே வர முடிவு செய்து விட்டு, ஆன்லைன் ரம்மி விளையாட்டை டெலிட் செய்து விட்டாலும், போன்ஸ் பணம் கொடுத்து மீண்டும் விளையாடத் தூண்டும்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை சம்பாதிக்க முடியுமா? : தில்லாலங்கடியை புட்டுபுட்டு வைக்கும் வீடியோ!

இதனால் தான் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து பாதியிலேயே வெளியே வந்தாலும் இழந்த பணத்தை எப்படியாவது மீண்டும் எடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பலர் மீண்டும் விளையாடத் தொடங்குகிறார்கள்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டின் முக்கிய நோக்கமே 24 மணி நேரமும் இந்த போட்டியை விளையாட வேண்டும் என்பதுதான். குடும்பம் என அனைத்தையும் மறந்து எல்லா நேரமும் இந்த விளையாட்டைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருக்க வைப்பதால்தான் இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் ஒரு வித பதட்டத்திலேயே இருக்கிறார்கள். இவர்கள் தங்களது அன்றாட செயல்களைக் கூட செய்ய முடியாத நிலையில்தான் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கிறார்கள் என அந்த வீடியோ தெளிவாகப் பேசுகிறது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை சம்பாதிக்க முடியுமா? : தில்லாலங்கடியை புட்டுபுட்டு வைக்கும் வீடியோ!

இப்படி மதிப்பு மிக்க மனிதர்களின் உயிர்களைக் காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திமு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி கொஞ்சம் கூட மனிதர்களின் உயிர்களை பற்றி கவலைப்படாமல், சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்காமல் அரசுக்கு திருப்பி அனுப்புகிறார்.

இந்நிலையில் மீண்டும் இன்று ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா மீண்டும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories