வைரல்

மக்களே உஷார்..! Lens போட்டு தூங்கிய நபர்.. திடீரென காணாமல் போன கருவிழி.. அதிர்ச்சியில் இளைஞர் !

கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கிய நபரின் ஒரு கண்ணின் கருவிழி பூச்சி அரித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களே உஷார்..! Lens போட்டு தூங்கிய நபர்.. திடீரென காணாமல் போன கருவிழி.. அதிர்ச்சியில் இளைஞர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பொதுவாக தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் கண்களுக்கு கண்ணாடி அணிந்துகொள்கின்றனர். சிலர் கண்ணாடி போடுவதற்கு கூச்சப்பட்டு காண்டாக்ட் லென்ஸ் (Contact lens) பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் பயன்படுத்தும் லென்ஸ், அவர்களுக்கு சில சமயங்களில் ஆபத்தாக முடிகிறது. காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும்போது சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

அவ்வாறு அவர்கள் கடைபிடிக்கா விட்டால், அது அவர்களுக்கு பலவகையான பின்விளைவுகளை தரக்கூடியதாக அமையும். இப்படி சிலர் தங்கள் பார்வையை இழந்த கதையும் உண்டு. இது அவர்களுக்கு இப்போது தெரியாவிட்டாலும் கூட, பிற்காலத்தில் அவர்கள் பலகட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். தற்போது அதுபோன்ற செயலை இளைஞர் ஒருவர் செய்ததால், அவரது ஒரு பார்வை இழந்துள்ளார்.

மக்களே உஷார்..! Lens போட்டு தூங்கிய நபர்.. திடீரென காணாமல் போன கருவிழி.. அதிர்ச்சியில் இளைஞர் !

நாம் பயன்படுத்தும் காண்டாக்ட் லென்ஸை ஒரு Solution-க்குள் பாதுகாத்து வைக்க வேண்டும்; வெயில் படாத இடங்களில் வைக்க வேண்டும்; முக்கியமாக நாம் அணிந்திருக்கும் லென்ஸை, தூங்கும்போதும், குளிக்கும்போதும் மறக்காமல் கண்களில் இருந்து வெளியேற்ற வேண்டும். இதனை நாம் சரியாக கையாளா விட்டால், நாம் சிக்கல்களை சந்திக்க நேரிடக்கூடும்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் மைக் க்ரும்ஹோல்ஸ் (21). இவர் சிறு வயதிலே தனது பார்வை குறைபாடு காரணமாக கண்ணாடியை அணிந்து வந்துள்ளார். நாளடைவில் கல்லூரி காலம் தொடங்கவே அங்குள்ள இளைஞர்கள் உடனிருப்பவர்கள் என அனைவரும் கண்ணாடிக்கு பதில் காண்டாக்ட் லென்ஸ் (Contact lens) பயன்படுத்தவே, இவரும் அதனை பயன்படுத்த எண்ணியுள்ளார்.

மக்களே உஷார்..! Lens போட்டு தூங்கிய நபர்.. திடீரென காணாமல் போன கருவிழி.. அதிர்ச்சியில் இளைஞர் !

எனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடர்ச்சியாக காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் இவர் தூங்குவதற்கு முன்பு அதனை கழற்றி வைக்க மறந்து அப்படியே தூங்கி தூங்கி எழுந்து வந்துள்ளார். இப்படி அடிக்கடி செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இது அவரது பார்வையை இழக்க செய்துள்ளது.

அதன்படி ஒரு நாள் இரவு காண்டாக்ட் லென்ஸுடன் தூங்கியுள்ளார் மைக். ஆனால் திடீரென தனது கண் எரிச்சலாகிறது என்று சிறிது நேரத்திலேயே அவர் கண்விழித்து எழுந்துள்ளார். தொடர்ந்து அவருக்கு கண்களில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. பின்னர் கண்களை கசக்கி கொண்டே அதனை பெரிதாக எண்ணாமல் மீண்டும் தூங்கியுள்ளார்.

மக்களே உஷார்..! Lens போட்டு தூங்கிய நபர்.. திடீரென காணாமல் போன கருவிழி.. அதிர்ச்சியில் இளைஞர் !

பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்துள்ளார், அவரது வலது கண்ணில் பார்வை தெரியவில்லை. எனவே கண்ணாடியை பார்த்தபோது, அவரது அந்த கண்ணில் உள்ள கருவிழி காணாமல் போய், வெறும் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருந்துள்ளது. இதனால் பதற்றமடைந்த மைக், உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதனை செய்ததில் அவரது கருவிழியை மிகவும் அரிதான அக்கன்தமோய்பா கேராடிட்டிஸ் (Acanthamoeba keratitis) என்ற ஒருவகை ஒட்டுண்ணி தின்றுவிட்டது தெரியவந்தது. அதாவது கான்டாக்ட் லென்ஸை கண்ணில் அணிந்த படியே தூங்கியதால் அரிய வகையான உண்ணும் ஒட்டுண்ணி அவரது கண்ணை தாக்கியதாக மருத்துவர்கள் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மக்களே உஷார்..! Lens போட்டு தூங்கிய நபர்.. திடீரென காணாமல் போன கருவிழி.. அதிர்ச்சியில் இளைஞர் !

இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தன்னை போல் யாரும் கவனக்குறைவாக இல்லாமல் இருக்க, இதுகுறித்து அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், "நான் கடந்த எழு வருடங்களாக கான்டாக்ட் லென்ஸ் அணிந்து வருகிறேன். ஒரு நாள் கான்டாக்ட் லென்ஸை கழட்டாமல் தூங்கியதால் என்னுடன் வலது கண் பார்வையை இழந்துள்ளேன். கண்ணில் பார்வை இழந்ததால் என்னால் எந்த வேலையும் செய்ய இயலாது மற்றும் வெளியில் செல்ல முடியாது. இப்படிப்பட்ட சூழலில் நான் இருப்பது எனக்கு வேதனையாக உள்ளது.

நான் தற்போது இருக்கும் பயங்கரமான சூழ்நிலை யாருக்கும் வரக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், நீங்கள் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு தூங்க கூடாது. அதுமட்டுமின்றி குளிக்கக் கூடாது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories