வைரல்

கடும் பனிப்பொழிவு.. பிரசவத்திற்குச் செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணி: தக்க சமயத்தில் உதவிய WhatsApp!

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக பிரசவத்திற்குச் செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணிக்கு வாட்ஸ் ஆப் மூலம் மருத்துவர்கள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடும் பனிப்பொழிவு.. பிரசவத்திற்குச் செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணி: தக்க சமயத்தில் உதவிய WhatsApp!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நண்பன் படத்தின் இறுதி காட்சியில் பிரசவ வலியால் துடிக்கும் நடிகை அனுயாவால் கடும் மழை காரணமாக மருத்துவமனைக்குச் செல்லமுடியாது. அப்போது நடிகர் விஜய் தனது நண்பர்கள் உதவியுடன் கணினி வழியாக மருத்துவர்கள் ஆலோசனை படி அனுயாவிற்கு பிரசவம் பார்ப்பார். இந்த காட்சி பதட்டத்துடனும் காண்போரை கண்களங்கம் விதமாகவும் இருக்கும். நண்பன் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த காட்சிபோன்ற சம்பவம் காஷ்மீரில் ஒரு நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

கடும் பனிப்பொழிவு.. பிரசவத்திற்குச் செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணி: தக்க சமயத்தில் உதவிய WhatsApp!

ஜம்மு காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் பல கிராமங்களில் போக்குவரத்து சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரான் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குப் பிரசவ எலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் பனிப்மொழிவு கடுமையாக இருந்ததால் அவரை அருகே இருந்த ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கடும் பனிப்பொழிவு.. பிரசவத்திற்குச் செல்ல முடியாமல் தவித்த கர்ப்பிணி: தக்க சமயத்தில் உதவிய WhatsApp!

அங்கு பிரசவத்திற்கான போதுமான வசதிகள் மற்றும் மகப்பெறு மருத்துவர்கள் இல்லாததால் அங்கிருந்து அவரை மகப்பெறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால்கடும் பனிப்மொழிவு காரணமாக அவரை அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆரம்ப சுகாதாரத்தில் இருந்து செவிலியர்கள் வாட்ஸ் ஆப் மூலம் மகப்பெறு மருத்துவர்களை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறியுள்ளனர். அவரை மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து வாட்ஸ் ஆப் மூலமே அவருக்குப் பிரசவம் பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து மகப்பெறு மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஆரம்பச் சுகாதாரத்தில் இருந்த செவிலியர்கள் அந்த பெண்ணுக்குப் பிரசவம் பார்த்துள்ளனர். 6 மணி நேரத்திற்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். இந்த சம்பவம் மருத்துவர்கள் உட்பட அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் வளர்ச்சியடைந்துள்ள தகவல் தொழில்நுட்பம் எந்த அளவிற்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதிற்கு எடுத்துக்காட்டாகவும் இந்த சம்பவம் அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories