வைரல்

நாட்டிலேயே முதல் முறை.. குழந்தை பெற்ற திருநங்கை தம்பதி: குவியும் வாழ்த்துக்கள்!

கேரளாவை சேர்ந்த திருநங்கை தம்பதிகளுக்குக் குழந்தை பிறந்ததை அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நாட்டிலேயே முதல் முறை.. குழந்தை பெற்ற திருநங்கை தம்பதி: குவியும் வாழ்த்துக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் கோழிக்கோடு, உம்மலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சஹாத் பாசில். பெண்ணாகப் பிறந்த இவர் ஆணாக மாறினார். அதேபோல் ஜியா பாவல் ஆணாகப் பிறந்து பண்ணாக மாறியவர். இவர்கள் தங்களது குடும்பத்தில் பல எதிர்ப்புகளையும் மீறி கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

திருநங்கை தம்பதிகளான இவர்கள் குழந்தை மீதான ஆசையால் குழந்தையைத் தத்தெடுக்க முதலில் நினைத்தனர். இதில் சில சிக்கல்கள் இருந்ததால் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தனர்.

நாட்டிலேயே முதல் முறை.. குழந்தை பெற்ற திருநங்கை தம்பதி: குவியும் வாழ்த்துக்கள்!

பிறகு மருத்துவர்களைச் சந்தித்துள்ளனர். அப்போது பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹாத் பாசில் கருப்பை அகற்றப்படாமல் இருந்ததால் அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குழந்தை பெற்றுக் கொள்ள இந்த தம்பதி சம்மதம் தெரிவித்துள்ளனர். பிறகு ஜியா பாவல் விந்தணுவைப் பெற்று, சோதனை கூடத்தில் கருவாக வளரவைத்து சஹாத் பாசில் கருப்பைக்குள் செலுத்தினர். தற்போது இந்த தம்பதிக்குக் கோழிக்கோ மருத்துவக் கல்லூரியில் அழகிய குழந்தை பிறந்துள்ளது.

நாட்டிலேயே முதல் முறை.. குழந்தை பெற்ற திருநங்கை தம்பதி: குவியும் வாழ்த்துக்கள்!

இதையடுத்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்த், தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாக வழங்க வேண்டும் என கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளிடம் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், "திருநங்கைகளான சாஹத் - சியா பாவல் இப்போது பெற்றோர்கள் என்பதைக் கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் குழந்தை பிறப்பு ஒரு புதிய, பாலினம் விழிப்புணர்வு உலகத்திற்கான கதவுகளைத் திறக்கட்டும்." என கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இப்படி பலரும் திருநங்கை தம்பதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

"இது எங்களது வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள். எங்களை காயப்படுத்தியவர்களுக்கு எங்களுக்கு பிறந்தத குழந்தைதான் பதில். எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி " என தம்பதிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறையாக திருநங்கை தம்பதிக்குக் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories