உலகம்

36 மணி நேரம்.. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி: இதயத்தை உருக்கும் நிகழ்வு!

துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தம்பியை 7 வயது சிறுமி 36 மணி நேரம் பாதுகாத்த சம்பவம் நடந்துள்ளது.

36 மணி நேரம்.. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி: இதயத்தை உருக்கும் நிகழ்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய தரைக்கடல் பகுதியில் ஐரோப்பாவையும், இந்தியாவையும் இணைக்கும் இடத்தில் துருக்கி நாடு அமைந்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் இந்த பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை காசியானதெப் எனும் இடத்தில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் நொடியில் தரைமட்டமான நிலையில், இடிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். அதிகாலை நேரம் என்பதால் ஏராளமானோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

36 மணி நேரம்.. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி: இதயத்தை உருக்கும் நிகழ்வு!
36 மணி நேரம்.. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி: இதயத்தை உருக்கும் நிகழ்வு!

மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா நாட்டிலும் பல்வேறு நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டிட இடிபாடுகளை அகற்ற அகற்ற இறந்தவர்கள் சடலங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000-ஐ தாண்டியுள்ளது. துருக்கியில் 12,391 பேரும் சிரியாவில் 2,992 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

36 மணி நேரம்.. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி: இதயத்தை உருக்கும் நிகழ்வு!

அதோடு 2 கோடியே 30 லட்சம் மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து துருக்கி, சிரியாவிற்கு உலக நாடுகள் அனைத்தும் மருந்து, உடை உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

மேலும் இந்த பேரழிவிலும் சில அதிசய சம்பவங்களும் நடந்து வருகிறது. துருக்கியில் உள்ள ஒரு இடத்தில் இடிபாடுகளில் சிக்கிய நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர், குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அனுதாபத்தைப் பெற்று வருகிறது.

அதேபோன்று, இடிபாடுகளில் சிக்கிய தனது தம்பியை 7 வயது சிறுமி கட்டி அணைத்தபடி 36 மணி நேரத்திற்கு மேலாகப் பாதுகாத்த சம்பவம் நடந்துள்ளது. இடிபாடுகளை அகற்றும் போது இதைக் கண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் மருத்துவ சிகிச்சையுடன் நலமுடன் இருப்பதாக தெரியவருகிறது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories