வைரல்

பிரைடு ரைஸூக்கு கூடுதலாக சால்னா கேட்டு ஓட்டலை சூறையாடிய இளைஞர்கள்.. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!

புதுச்சேரியில் கூடுதலாக சால்னா கேட்டு ஓட்டலை சூறையாடிய 2 பேரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

பிரைடு ரைஸூக்கு கூடுதலாக சால்னா கேட்டு ஓட்டலை சூறையாடிய இளைஞர்கள்.. புதுச்சேரியில் பரபரப்பு சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரி முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகரை சேர்ந்தவர் டேவிட் பாஸ்கர் (வயது 57). இவர் லாஸ்பேட்டை கல்லூரி சாலையில் உள்ள ஓட்டலில் மேலாளராக உள்ளார். அந்த ஓட்டலுக்கு கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரை சேர்ந்த கிருஷ்ணகுமார், அவரது நண்பர் ஜெயகணேஷ் ஆகியோர் வந்து பிரைடு ரைஸ் வாங்கியுள்ளனர்.

பின்னர் அதற்கு கூடுதலாக சால்னா மற்றும் சாஸ் கேட்டுள்ளனர். அதற்கு ஓட்டல் ஊழியர்கள் தரமறுக்கவே அவர்கள் கடாய் (நூடுல்ஸ் தயாரிக்கும் சட்டி) மற்றும் கரண்டியால் டேவிட் பாஸ்கரை தாக்கியுள்ளனர். மேலும் ஓட்டல் பொருட்களையும் சூறையாடி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலிஸார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணா மற்றும் ஜெய்கணேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கூடுதல் சால்னா மற்றும் சாஸ்காக ஹோட்டல் ஊழியரை இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

banner

Related Stories

Related Stories