வைரல்

13 சாத்தானின் எண் என்பது உண்மைதானா?... யாரால் உருட்டப்பட்ட உருட்டு இது!

பொதுவாக 13ம் எண் ராசியில்லாத எண்ணாகதான் பார்க்கப்படுகிறது. இந்த நம்பிக்கைக்கு பிறப்பிடமாக இருப்பது அமெரிக்க நாடுகள்.

13 சாத்தானின் எண் என்பது உண்மைதானா?...  யாரால் உருட்டப்பட்ட உருட்டு இது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

ஜனவரி 13, 1882ம் ஆண்டு.

நியூ யார்க் நகரத்தின் மேன்ஹேட்டன் பகுதியில் ஒரு குழு தொடங்கப்பட்டது. மேன்ஹேட்டனில் இருக்கும் நிக்கர்பாக்கர் காட்டேஜ்ஜின் 13ம் அறையில் சிலர் கூடியிருந்தனர். மொத்தமாக 12 பேர் இருந்தனர். உணவு மேஜை தயாரிக்கப்பட்டிருந்தது. 13 மெழுகுவர்த்திகள் மேஜையில் கொளுத்தப்பட்டிருந்தன. அருகேயே சில எழுத்துகளை கொண்ட பதாகை ஒன்று இருந்தது. ‘சாகவிருக்கும் நாங்கள் உங்களை வணங்குகிறோம்’ என லத்தீன் மொழியில் பதாகையில் எழுத்துகள் இருந்தன. குழுவை தலைமை தாங்கியவரின் பெயர் வில்லியம் ஃபவுலர். ‘கடைசி விருந்து’ ஓவியத்தை போலவே 13ம் நபர் கடைசியில் வந்தார். விருந்து தொடங்கியது. Thirteen Club எனப் பெயரிடப்பட்ட குழுவும் இயங்கத் தொடங்கியது.

உலகின் பல்வேறு நாடுகள் கொண்டிருக்கும் பல நம்பிக்கைகளில் ஒன்று பதிமூன்றாம் எண் பற்றி கொண்டிருக்கும் நம்பிக்கை. பொதுவாக 13ம் எண் ராசியில்லாத எண்ணாகதான் பார்க்கப்படுகிறது. இந்த நம்பிக்கைக்கு பிறப்பிடமாக இருப்பது அமெரிக்க நாடுகள்.

13 சாத்தானின் எண் என்பது உண்மைதானா?...  யாரால் உருட்டப்பட்ட உருட்டு இது!

13 என்பது சாத்தானின் எண் என தொடங்கும் நம்பிக்கை, 13ம் எண் ராசியில்லை, 13 நாளில் துயர சம்பவம் நடக்கும், 13ம் எண் யாரையேனும் பலி வாங்கும், 13ம் எண் கொண்ட நாளில் பேய் வரும் என்பன போன்ற பலவித நம்பிக்கைகளாக அமெரிக்காவில் வளர்ந்து விரிந்து கிடக்கிறது.

13 என்கிற எண் ஏற்படுத்தியிருந்த நம்பிக்கையை உடைப்பதற்கான வேலை முன்பே தொடங்கிவிட்டது. கட்டடங்கள் 13ம் மாடியை கட்டத் தயங்கியதும் நீதிபதிகள் மரண தண்டனைகளை வெள்ளிக்கிழமைகளில் நிறைவேற்ற உத்தரவிட்டதும் என பல நம்பிக்கைகள் வெள்ளிக்கிழமை மற்றும் 13ம் எண் ஆகியவற்றை பற்றி இருக்கிறது. எந்தவொரு நம்பிக்கை கட்டியெழுப்பப்படும்போது அதன் பொய்யை அம்பலப்படுத்துவதும் நடக்கவே செய்யும்.

13 சாத்தானின் எண் என்பது உண்மைதானா?...  யாரால் உருட்டப்பட்ட உருட்டு இது!

வில்லியம் ஃபவுலரின் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்தது. அவருடைய வாழ்க்கையை திரும்பி பார்த்தபோது முக்கியமான உண்மைகள் சில புலப்பட்டன. அவர் கட்டட வடிவமைப்பாளராக இருந்தபோது கட்டிய கட்டடங்களின் எண்ணிக்கை 13. ராணுவத்தில் பணியாற்றியபோது அவர் எதிர்கொண்டு தப்பித்த போர்களின் எண்ணிக்கை 13. பிறகுதான் சமூகத்தில் 13ம் எண் பற்றி நிலவும் நம்பிக்கையும் அது கொண்ட மூடத்தனமும் புரிந்தது. 13ம் எண்ணை சுற்றி இருக்கும் நம்பிக்கைகளின் மூடத்தனத்தை வெளிச்சமாக்க வேண்டுமென முடிவெடுத்தார். 19ம் நூற்றாண்டு காலத்தில் க்ளப் வாழ்க்கை அறிமுகமாகியிருந்தது.

வில்லியம் ஃபவுலருக்கும் க்ளப் வாழ்க்கை பரிச்சயம். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நேரம் கழிப்பதே க்ளப்கள் கொண்டிருந்த வாழ்க்கைமுறை. அங்கேயே புதிய உறவுகளும் புதிய நண்பர்களும் கிடைக்கும் சாத்தியமும் அதிகமாக இருந்ததால் க்ளப் வாழ்க்கைமுறை அனைவரையும் ஈர்த்திருந்தது. ஆகவே வில்லியம் ஃபவுலர் 13ம் எண் மீது கொண்டுள்ள மூடநம்பிக்கைகளை முறியடிக்க க்ளப் தொடங்குவதென முடிவெடுத்தார். வில்லியம் ஃபவுலர் முடிவெடுத்துவிட்டாலும் க்ளப்புக்கான உறுப்பினர்களை சேர்ப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. க்ளப் தொடங்கும் நாளில் வர வேண்டிய 13 பேரை உறுப்பினர்களாக்கவே ஒரு வருடம் ஆகிவிட்டது ஃபவுலருக்கு.

13 சாத்தானின் எண் என்பது உண்மைதானா?...  யாரால் உருட்டப்பட்ட உருட்டு இது!

பதிமூன்று க்ளப்பில் பல சுவாரஸ்யங்கள் இருந்தன. உணவுப் பட்டியலில் 13 உணவு வகைகள் இருந்தன. மது பட்டியல் கல்லறை தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன. உறுப்பினர்கள் கறுப்பு உடைகளில்தான் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட ஒரு மரணத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுக்கு போகும் எல்லா பிரயத்தனங்களும் இருந்தன. நீதிபதிகள் வெள்ளிக்கிழமைகளில் மரண தண்டனைகள் நிறைவேற்ற உத்தரவிடுவதை மாற்ற வேண்டும் என குழு கேட்டுக் கொண்டது. ஒரே ஒரு மரண தண்டனை மட்டும் வேறு கிழமையில் விதிக்கப்பட்டது. சமூகத்தில் பிரபலமாக இருந்த பலரும் கூட குழுவில் இணைந்தனர். க்ளப் கூடுகையில் வருகை தந்தனர். அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கூட நிகழ்வுகளில் பங்குபெற்றனர். நான்கு வருடங்களில் மட்டும் 400 பேர் வருகை தரும் அளவுக்கு க்ளப் விரிவடைந்திருந்தது. நாளடைவில் பிறரு 13ம் எண்ணை பெயராக கொண்டு க்ளப்கள் தொடங்கினர். 13ம் எண் பற்றிய மூட நம்பிக்கையை எதிர்க்கும் மனநிலை அதிகமாக பரவியது. 13ம் க்ளப்பில் இருந்த உறுப்பினர்கள் எவருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. சந்தோஷமாக வாழ்ந்தார்கள். முழு வாழ்க்கை வாழ்ந்தே இறந்தார்கள். எண் 13-ஐ சொல்லப்பட்ட எந்த நம்பிக்கையும் அவர்களிடம் பலிக்கவில்லை.

ஆனாலும் எண் 13-ஐ பற்றிய நம்பிக்கை இன்னும் அமெரிக்காவில் இருக்கிறது.

அமெரிக்க வரலாற்றில் எந்த அமெரிக்கரும் பார்க்க விரும்பாத காலகட்டம் ஒன்று இருக்கிறது. அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த காலகட்டம். இன்றைய நாகரிக மனிதனுக்கு பொருந்தாத பிற்போக்கு சிந்தனையே அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு காரணமாக இருந்தது. அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் அடிமை முறையை ஒழித்தார். அதாவது கறுப்பினத்தவரை எவரும் அடிமையாக வைத்திருக்க முடியாது என சட்டம் நிறைவேறியது. கறுப்பினத்தவரை சமமாக நினைக்காத வெள்ளை இன ஆதிக்க வெறி கொண்டிருந்தோர் மத்தியில் இச்சட்டம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவிலிருந்த பல மாகாணங்கள் வெள்ளை இன வெறி கொண்டு அமெரிக்க சட்டத்தை எதிர்த்தது.

13 சாத்தானின் எண் என்பது உண்மைதானா?...  யாரால் உருட்டப்பட்ட உருட்டு இது!

அமெரிக்காவிலிருந்து பிரிவதாக அறிவித்து தனி நாடாகின. பிரிந்து சென்ற மாகாணங்களுடன் அமெரிக்கா தொடுத்த போரே உள்நாட்டுப் போர் என அழைக்கப்படுகிறது. பல வருடங்களுக்கு தொடர்ந்து லட்சக்கணக்கான உயிர்களை பறித்த போர் என்றாலும் அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு பின்னாலிருக்கு வெள்ளை இன வெறியே அப்போரை பலரும் அருவருக்க முக்கிய காரணம். போருக்கு பின் மீண்டும் அமெரிக்காவுடன் பிரிந்து சென்ற மாகாணங்கள் இணைந்தபோதும் வெள்ளை இன வெறி மட்டும் அடங்கவே இல்லை. வெள்ளை இன ஆதிக்கத்தையும் அமெரிக்காவை விட்டு பிரிந்ததையும் நினைவில் நிறுத்தவென தேர்ந்தெடுக்கப்பட்ட எண்தான் 13. இங்கு எங்கு எண் 13 வந்தது?

கறுப்பினத்தவரை சக மனிதராக மதிக்க மாட்டோம் என அறிவித்துவிட்டு அமெரிக்காவிலிருந்து பிரிந்து சென்று தனி நாடான மாகாணங்களின் எண்ணிக்கை 13.

நம்பிக்கைகள் பல நேரம் முந்தைய வாழ்க்கைகளின் எச்சமாக இருக்கிறது. சில நேரங்களில் முந்தைய வாழ்க்கைகள் கொண்டிருந்த அழுக்குகளின் எச்சமாகவும் அவை இருக்கிறது.

banner

Related Stories

Related Stories